மூலிகை மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழ இயற்கை அளித்த அருமருந்து தான் பாகற்காய். அதில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்படுத்தும் முறையும் கீழே தரப்பட்டுள்ளது. பாகற்காயின் இலையை சிறிது சாறு எடுத்து ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ காய்ச்சல் நின்று விடும்.
நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு
எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
கற்பூரவள்ளி வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும்
மணி பிளானட் போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு
கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும்
கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இதன் இலை தடித்து காணப்படும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்றது. இது முக்கியமாக வீடுகளில் வளர்க்கக்
காரணம் , இது குழந்தைகளுக்கு வரும் சளி முதலிய நோய்களுக்கு கை கண்ட மருமத்து
. பிறந்த சிறிய குழந்தைக்கு கூட நம்பி
இதன் சாரை கொடுப்பதை இன்னும் காணலாம் . தாவர பெயர் Coleus Aromaticus. இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை அனைவரையும் வாட்டி வதைக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் முக்கியமானது .
இந்து இயற்க்கை கெடுவதால் காற்றின் தூய்மை கெடுவதால் வருவது .. ஆஸ்துமா
நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய்
உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும். இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி
இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால்
ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம். மூக்கில் நீர் வடிந்து அது சில
நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின்
சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல்
தொல்லையிலிருந்து விடுபடலாம். காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய
கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன்
கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். இதை இந்திய மருந்து கழகம் ஆராய்ந்து
முடிவை தந்திருக்கிறது . கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும்.
வீட்டிலும் சுற்றுப்புறத்தை காக்கும் . சித்தர்கள்களுக்கு இந்த வல்லி எனும்
பெயர் மேல் ஒரு ஆசை உண்டு. அமிர்த வள்ளி , கற்பூரவள்ளி என பல மூலிகைக்கு பெயர்
வைத்துள்ளனர். வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப்
பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். இதன் இலைகள் காரம் கலந்த
சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும். இது
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு
பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட
குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும். கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும். இன்னும் உருளை கிழங்கு வாழை காய் பஜ்ஜி செய்து சாப்பிட்டு வாயுத் தொல்லையில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதை விட, கற்பூரவள்ளி இலையை உபயோகித்து சுவையான பஜ்ஜி செய்யலாம்.
கீழாநெல்லி - கீழ்காய் நெல்லி தமிழ் நாட்டில் அநேகருக்கு தெரிந்த மூலிகை கீழாநெல்லியாகத்தான் இருக்கும் .மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி என்று பலரும் இலவச வைத்திய முறை மஞ்சள் காமாலை என்று கேள்விப்பட்டதும் கூறுவார்கள் . ஆனால் அணுபான முறை அநேகருக்கு சரிவரத் தெரியாது .கீழாநெல்லி மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றது. நமது சித்தர்கள் தமது சித்தத்தை அடக்கி, ஞானத்தை பெருக்கி உடம்பை வளர்த்து உயிரை வளர்க்கும் உபாயத்தை நமக்கு அன்புடன் விட்டுசென்றுள்ளனர் . ஆனால் நாம் ஆங்கிலேயரின் ஆட்ச்சியில் இருந்தபோது இததகைய பாரம்பரிய உயர் மருத்துவ முறைகளை உதாசீனப்படுத்திவிட்டோம். அவைகளை தொகுத்து வைக்க மறந்து விட்டோன். பலாயிரக்கனக்கான ஓலை சுவடிகள் படிஎடுக்கப்படாமல் ஆடிப்பெருக்கில் ஆற்றினில் விடப்பட்டது ..சித்த மருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மூலிகைகள்தான். மூலிகைகள் இன்றி சித்த மருத்துவம்
இல்லை என்றே கூறலாம். ஒவ்வரு உள்ளுருப்பையும் பாதுகாக்க ஒவ்வரு மூலிகைகைகளை
நமது சித்தர்கள் நமக்கு காட்டிச்சென்றுள்ளனர் . சிறுநீரகத்தைக் காக்கும்.சிறுநீரகத்துக்கு ஏற்ற சிறுபீளை, நெருஞ்சில், அதியமான் நெடுநாள் வாழ ஒளவை வழங்கிய ஆயுள் காக்கும் நெல்லி மற்றும் அதன் வகைகள், ஆண்மைக் குறைவைப் போக்கும் பூனைக்காலி, கருப்பைக் கோளாறுகளைத் தீர்க்கப் பயன்படும் அசோக மரம், புற்று நோயைப் புறக்கணிக்க உதவும் கொடிவேலியும், நித்திய கல்யாணியும், இதயத்திற்கு செம்பருத்தி, மூளைக்கு வல்லாரை என இவ்வாறு வகைப்படுத்தி உள்ளனர் .இதில் முக்கிய உறுப்பான கல்லீரலுக்கு கீழாநெல்லிதான் காக்கும் நண்பன். மிகக் கொடிய நோய்களுக்கான மருந்துகள்
சித்த மருத்துவத்தில்இருந்தாலும்கூட, முதலில் வேர் பாரு, தழை பாரு மிஞ்சினா
மெல்ல மெல்ல பற்பஞ் செந்தூரம் பாரு' என்பது சித்தர்களின் வழி. இலைகளில்
இருக்கும் வைத்திய முறைகள், நோய்களை வராமல் தடுக்கும் இயற்க்கை முறை. உணவிலேயே
சரிப்படுத்த நாம் எடுக்கும் முதல் வழி. இதன் வேறுபெயர்கள் -: கீழ்காய் நெல்லி,
கீழ்வாய் நெல்லி.காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி. இது ஒரு குறுஞ் செடி, இரண்டு அடிவரை வளரும் . மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்தசிறு இலைகளை உடையது. இலைக் கொத்தின் அடிப்புறத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும். கீழா நெல்லி என அதானால் தன பெயர் வந்தது போலும். கீழா நெல்லி தான் என்பதறுகு, காய்கள் கீழ்நோக்கி அடிப்புரத்தில் இருக்கினவா என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் தான் இதனைப் பயன் படுத்த வேண்டும். செடி முழுதும், தண்டு, வேர், மற்றும் இலைகள்.அனைத்தும் பயன் தரும். மஞ்சக்காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும். கீழாநெல்லி செடி 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த அதை பால் மோர் ஏதேனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க காமாலை நிச்சயம் குணமாகும்.இத்க்து ஒரு அனுபவ வைத்தியம். கீழாநெல்லி தைலமாகவும் செய்து
பயன்ப்படுத்தப் படுகிறது. நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர்,
கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு
அரைத்து கலக்கிக் கொதிக்கவைத்து வடித்து தலை முழுகி வரலாம் நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன்
சிதைத்து2 குவளை நீரில் பொட்டு ஒரு குவளையாகக்காச்சி மூன்று வேளையாகக்
குடித்து வர சூடு, சுரம்,தேக எரிச்சல் தீரும். இலையில் உப்பு சேர்த்து அரைத்துத்
தடவிக்குளிக்கச் சொறி சிரங்கு, நமச்சல் தீரும். கீழாநெல்லி அரைத்து இத்துடன் வில்வ
இலைச்சாறு கறிப்பான் இலைக்சாறு, நாயுருவி வேருடன் பிடுங்கி அதனை இடித்து
இவற்றை எல்லாம் சேர்த்து வடிகட்டி ஒரு நாளைக்கு 2 வேளை தொடர்ந்து 40 நாட்கள்
கொடுத்து வர தீராத மஞ்சள் காமாலை நோய் தீரும். நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின்
இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து, பத்து முதல்
பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள்
காமாலை பறந்தே போய்விடும். பொதுவாக கல்லீரலுக்கும் கண்களுக்கும்
நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகையினால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க
வேண்டும். அதற்கு கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட
வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டு வரலாம். பொதுவாக இரவு
படுக்கப் போகும் முன்பு, இரு கண்களையும் குளிர் நீரால் கழுவி,
சுத்தப்படுத்திக் கொள்வதன் மூலம் கண்களுக்குக் குளிர்ச்சியும், ஒருவித
புத்துணர்ச்சியும் கிடைத்து, கண்களின் உட்புறத்திலுள்ள நரம்புகளுக்குச் சக்தி
கிடைத்து தூய்மைப்படுத்தி கண்களைப் பாதுகாக்கிறது. நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன்
சேர்த்து 2 குவளை நீரில் பொட்டு ஒரு குவளையாகக்காச்சி மூன்று வேளையாகக்
குடித்து வர சூடு,சுரம்,தேக எரிச்சல் தீரும். நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின்
இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து, பத்து முதல்
பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள்
காமாலை பறந்தே போய்விடும். இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு
சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காச்சி தலை முழுக பார்வை கோளாறு தீரும். கிழா நெல்லியை வாரம் ஒரு முறையாவது
உபயோகித்து வர கல்லிரல் வலுவாக இருக்கும் .கல்லிரளுக்கு ,அதிக வேலைகளை உள்ளன.
இதயமும், கல்லிரலும் ஒன்றுதான் இருக்கிறது எனவே அவைகளை கவனமுடன் வருமுன்
காப்பது மிக அவசியம் .
வல்லாரை பிரம்மி என்று அழைக்கப்படும்
இத்தாவரம் தரையில் படர்ந்து பரவும். படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து
வேர்கள் புறப்படுகின்றன. இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களிலும்,
பெரும்பாலும் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்த வயல் வெளிகளிலும்
காணப்படுகின்றன. இலைகள் வட்ட வடிவமாக தவளையின் பாதம் போன்ற அமைப்பில் உள்ள
கீரை வகையைச் சேர்ந்தது. இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை
சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை
சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் பெற்றிருக்கிறது. மலேசியர்களும்,
சீனர்களும் வல்லாரையை விரும்பி உணவுடன் உட்கொள்கிறார்கள். இதிலுள்ள ஆவியாகும்
எண்ணெய் தோல் பகுதியில் செயல்பட்டு நன்கு வேலை செய்கிறது. உடலைத் தேற்றும்
பலம் தரும். தோல் வியாதியிலும் பயன் தரும். வீட்டுச் சமையலில் இக் கீரையை
வாரம் இருமுறை பயமின்றி உபயோகிக்கலாம். வல்லாரை - Centella அசியடிக்கா வல்லாரைக்கு சரஸ்வதி, பிண்டீரி,
யோகவல்லி, நயனவல்லி, குணசாலி, குளத்து குளத்தி, அசுர சாந்தினி போன்ற வேறு
பெயர்களும் உண்டு. வல்லாரையில் அதன் இலைதான் மருத்துவ பயன் மிகுதியாக கொண்டது அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக
எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயிலிட்டு மென்று தின்னவும்.
நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை
லிட்டர் பசும்பால் அருந்த வும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை
உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும்.
இதனால் சகல பைத்திய நோய்களும் தீரும். இதய நோய்கள் நீங்க படை, அரிப்பு, சிரங்கு
குஷ்டம் மறைய... நினைவாற்றல், ஞாபகசக்தி பெற வலிப்பு குணமாக... காமாலை குணமாக... வல்லாரை இலைச்சாற்றில் அரிசித்
திப்பிலியை ஊறவைத்து உலர்த்தித் தூள்செய்து வைத்துக்கொள்ளவும். இதில் நான்கு
சிட்டிகை அளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர, நாள்பட்ட
கபநோய்கள், இரைப்பு, இருமல் ஆகியவை குணமாகும். உடல் வலிமை உண்டாக... வல்லாரைக் கற்பம்... வல்லாரைக் கற்பத்தைப்
பயன்படுத்துவதற்கு முன்பாக, பேதி மற்றும் வாந்தி செய்விக்கும் மருந்துகளால்
உடல் சுத்தி செய்துகொள்ள வேண்டும். வேது பிடித்தல் போன்ற ஆவிக் குளியல்
முறைகளால் உடலில் வியர்வையை உண்டாக்கி கழிவுகளை நீக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் ஐந்து வல்லாரை இலைகளை எடுத்து
அரைத்துப் பிழிந்து சாறெடுத்து உட்கொள்ள வேண்டும். நான்கு மணி நேரம் எதுவும்
சாப்பிடாமல் இருந்து, அதன்பின் உப்பில்லாக் கஞ்சியைத் தேவையான அளவில் பருக
வேண்டும். நாள்தோறும் ஒவ்வொரு இலை அதிகம்
சேர்த்து 21 நாட்கள் சாப்பிட்டு, உப்பில்லாக் கஞ்சியைப் பருகி வர, மூளை
பலப்படும். அறிவுக் கூர்மை, அற்புத நினைவாற்றல், சுறுசுறுப்பு போன்றவை
உண்டாகும். சாப்பிட ஆரம்பித்த இரண்டு வாரங்களி
லேயே நூல்களைப் படைக்கும் சக்தி உண்டாகும். நுண்ணிய செய்திகளை ஏற்கும் தன்மை
உண்டாகும். மூன்று வாரங்களில் நூறு பாடங்களை வாய்ப்பாடமாய் சொல்லும் அளவுக்கு
மனசக்தி உண்டாகும். தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் உடல் இறுகும். உடலில்
காந்த சக்தி, அழகு உண்டாகும். ஆயுள் விருத்தியாகும். வல்லாரையை இடித்தெடுத்துப் பிழிந்த
சாறு அரைலிட்டர் நல்லெண்ணெய் அல்லது தே.எண்ணெய் அரைலிட்டர் இரண்டையும் கலந்து
அடுப்பில் வைத்து எரிக்க, அடிமண்டி மெழுகு போல விரலால் உருட்டும் போது
திரளும் பதத்தில் இறக்கி வடிகட்டி தினந்தோறும் தலையில் தடவியும், தேய்த்துக்
குளித்தும் வர, மூளைத்தெளிவு, குளிர்ச்சி தந்து நரையைத் தடுக்கும். வல்லாரை இலையை பால் கலந்து அரைத்து,
விழுதை நெல்லிக்காய் அளவு உண்டு வர நரை, திரை அகலும். இளமைத் தோற்றம்
திரும்பும். எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட
மாத்திரை குணமாக்கும். இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால்
நோய் நீங்கும் என்று கூறுவார்கள். வல்லாரை இலையை பச்சையாக பயன்படுத்தக்
கூடாது. இலைகளை ஆய்ந்து பிட்டுபோல அவித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
வல்லாரை இலையுடன் அரிசித் திப்பிலி சேர்த்து ஊறவைத்த மைபோல அரைத்து, காலை,
மாலை சுண்டைக் காயளவு சாப்பிட்டு வர நல்ல ஞாபசக்தி உண்டாகும். அழகுக்கூடும்… இது நினைவாற்றல் பெருக்கும். நோய்களுக்கு உபயோகிக்கும் முறை :
கண்டமாலை (கழுத்தில் உருண்டு திரண்டு மலைபோல் கட்டிக்கொள்ளும்) நாள்பட்ட
மேகவியாதி உடம்பு முழுவதும் புண் இவைகளுக்கு இதன் பச்சை இலையை நன்றாய்
அரைத்துப் பிழிந்து எடுத்த சாற்றில் வேளைக்கு 3-5 துளி பாலுடன் கூட்டிச்
சிறிது அதிமதுரச் சூரணம் கூட்டி 3 வேளை கொடுக்கலாம். அல்லது இதன் இலையைக்
காம்பு முதலியவை இல்லாமல் ஆய்ந்து சூரணம் செய்து சீசாவில் பத்திரப்படுத்தி
வைத்துக் கொண்டு வேளைக்கு 2-3 குன்றிமணி எடை சிறிது சர்க்கரைக் கூட்டித் தினம்
3 வேளைக் கொடுக்கலாம். அல்லது உலர்ந்த இலையில் ஒரு தோலா (3 பலம்) எடை 8
அவுன்ஸ் கொதிக்கின்ற நீரில் போட்டுச் சூடு ஆறினபின் வடித்து வேளைக்கு அரை
அல்லது ஒரு அவுன்ஸ் வீதம் பால் சர்க்கரை கூட்டித் தினம் இருவேளை கொடுக்கலாம்.
இவற்றால் வீக்கம் பயித்தியம் ஞாபகசக்தி குறைவு வெள்ளை முதலியன குணமாகும். குறிப்பு : இதை அளவுக்கு மிஞ்சி உபயோகப்படுத்த தலைவலி மயக்கம் விகாரபுத்தி முதலிய சம்பவிக்கும். எனவே சமயம் அறிந்து அளவோடு கொடுக்க வேண்டும்.
நெல்லிக் காய் தேவருலகில் இந்திரன் அமிர்தம்
அருந்தியபோது சிறிது பூமியில் சிந்தி அது நெல்லி மரமாக ஆனது என்று கூறுவார்கள். .உண்மையில்
நெல்லி ஒரு அமிர்தம் தான் .இல்லாவிடில் தனக்கு கிடைத்த கரு நெல்லியை அதியமான்
,தமிழ் வாழ அவ்வையாருக்கு அளித்து மகிழிந்திருப்பாரா ? நெல்லி காயாகத்தான் இருக்குமே தவிர
அது பழம் ஆவதில்லை . அதுவே காயகல்ப்பத்தன்மை. நெல்லியின் மேன்மையை தமிழர்
சங்ககாலத்தில் இருந்து அறிந்து வந்திருந்தனர் என்பது அதியமான் அவ்வையார்
கதையால் மட்டுமல்ல , கிழவரும் ஐங்குறுநூறு பாடலாலும் அறியலாம் . நெல்லி மரம் ஒரு சிறிய மரம்.
இந்தியாவின் பலப் பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் அதிகமாக வளர்கிறது.
தமிழகத்தில் வளரும் நெல்லிக்காய் அளவில் சிறியதாகவும் கொஞ்சம் துவர்ப்பும்,
புளிப்பும் அதிகம் கொண்டதாக இருக்கும். வடநாட்டில் வளரும் நெல்லி பெரிதாக
இருக்கும். நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள்.தண்ணீர் இனிப்பாக மாறிவிடும். இந்தபழக்கம் எல்லா கிராமத்திலேயும் முன்பு இருந்தது .இப்போது அவர்களுக்கு தெரியுமா தெரியவில்லை .நாம் தான் மினரல் வாட்டேருக்கு மாறிவிட்டோமே தாவரப்பெயர் -: EMBILICA
OFFICINALLIS. கருநெல்லி, அருநெல்லிஎன்ற இரு இனம்
உண்டு. நெல்லி காய் -- Tamil இலை, பட்டை.வேர், காய், பழம்,காய்ந்த
பழம், பூ, மற்றும் வேர்பட்டை, விதை அனைத்தும் பயன்தருவது . மாவுச் சத்து-14 கி. புரத சத்து-0.4
கி. கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி.கால்ஷியம்-15 மி.கி.
இரும்புச்சத்து - 1 மி.கி. வைட்டமின் பி1 28 மி.கி. வைட்டமின் சி 720 மி.கி.
நியாசின் - 0,4 மி.கி. கலோரிகள் - 60 நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15
மி.லி.எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம்
முற்றிலும் தீரும். மஞ்சளையும், நெல்லிக்காயையும்
சேர்த்து அரைத்து சிறுநீர்ப்பைத் தொற்று வியாதிகளுக்கு மருந்தாகக்
கொடுப்பார்கள். சிறுநீர் கழியாமல் தடைபடும் நிலையில்
ஏலக்காயையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து மருந்தாகக் கொடுப்பார்கள். இரத்தம் கலந்து சிறுநீர், சிறுநீர்
கழியும் போது வரும் எரிச்சல் போன்றவற்றிற்கு நெல்லிக்காயை தேனில் கலந்து
அரைத்துக் கொடுப்பார்கள். நெல்லிக்கனி விதையைப் பவுடராக்கி,
அதனுடன் அரிசி கஞ்சியை கலந்து கொடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய்க்
கோளாறுகள் கட்டுப்படும். தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது
தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும்
டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம்
பலப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும்,
அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண்நோய்
வராது. நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச்
சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி
சர்க்கரை வியாதியைத் தடுக்கும். ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடி, ஒரு
ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு
வந்தால் சர்க்கரை நோய் வராது. உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது
வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும். அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும்
நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை
நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து,
பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும்,
அடர்த்தியாகவும் இருக்க உதவும். அமலா கூந்தல்தைலம் கேடத்திற்கு நல்லது
.உடலுக்கு குளிர்ச்சி தரும் . நெல்லிக்காயை அரைத்துத் தூள் செய்து
வைத்துக் கொண்டு தினசரி சாப்பிட்டு வரவும். அல்லது நெல்லிக்காயைத் தேனில் ஊற
வைத்து சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயை துவையல், சட்னி, சூப் போன்ற ஏதேனும்
ஒரு முறையில் தினசரி சாப்பிட்டு வரலாம். ஆயுர்வேத மருந்து விற்பனைக்
கூடத்திற்குச் சென்று, உலகப் பிரசித்தி பெற்ற "சயவனபிராச லேகியம்' அல்லது "நெல்லிக்காய்
லேகியம்' எனக் கேட்டு வாங்குங்கள். இதனை தினசரி காலை- மாலை தொடர்ந்து
சாப்பிட்டு வாருங்கள். எண்ணற்ற பலன்களை இந்த ஒரே மருந்தினால் நீங்கள் பெறலாம். நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல்
அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து
கொள்ளவும். இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில்
இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின்
சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும். கடைகளில் "நிஷா ஆமலகி சூரணம்' என்ற
பெயரில் விற்பனைக்குக் கிடைக்கிறது. உபயோகித்து சர்க்கரை நோயிலிருந்து
விடுபடலாம். சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை,
மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை
நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப்
போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது. நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன்
சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக்
குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும். நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு
20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100
மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன்
கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும். தேரையர் என்னும் சித்தர்
கூறுவதையும் பார்க்கலாம்
மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த
மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச்
சொல்கின்றனர். எவ்வளவு இயல்பாக பேசுகிறார்கள்
பாருங்கள் .மாப்பிள்ளைகள் போல் இருக்கலாமாம் நெல்லிக்காய் சாப்பிட்டால் ! அப்புறம் என்ன இப்போது தான்
நெல்லிக்காய் சீசன் ,வாங்கி பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் .இது ஒரு வாழ்நாளை
நீடிக்கச் செய்யும் காயகல்ப மூலிகையாகும்.
குப்பை மேனி
தாவரப்பெயர் :- ACALYPHA INDICA. இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும்.
காடுமேட்டில் பொதுவாக இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது. இதை யாரும் வளர்ப்பதில்லை, காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது. சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். வசீகரப்படுத்தும்இயலடையது. இது ஒரு
வசிகர சாதனம். மாந்திரீக மூலிகையாகும். . நெஞ்சுக்கோழையை நீக்கும்.
இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா,
குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப்
பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர்
மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில்
இட தலை வலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி
சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும். வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை
போக்கவல்லது . இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த,
பூச்சிகள்அனைத்தும் வெளியேறும். தோல் நோய் நீக்கும் குப்பைமேனி! மருத்துவ குணங்கள்: குப்பைமேனி இலையை
விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். குப்பைமேனி இலையை கைப்பிடியளவு
எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம்
கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும். குப்பை மேனியின் வேரை நிழலில்
உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு
லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக்
குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும். குப்பைமேனி இலையை அரைத்து சாறு
எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க
வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும். குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு
பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக்
காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும். குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து
அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது
உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால்
வெளியேறும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர
குணமாகும். குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு
எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே
சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும். குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து
500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க
மலச்சிக்கல் நீங்கும். குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம்
எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட்டுவர எலிக்கடி குணமாகும். இந்த சமயத்தில்
வாந்தியையும் கழிச்சலையும் உண்டாக்கும். (ஆனால் உப்பில்லாமல் பத்தியம் இருக்க
வேண்டும்) எப்போதும் எந்த மூலிகைகளையும் தகுந்த
மருத்துவரை ஆலோசித்து பின் உள்ளுக்கு சாப்பிடுவது நல்லது .இது அணைத்து
மூலிகைகளுக்கும் பொருந்தும் . மேலும் எந்தமூலிகையும் சுத்தி செய்தல்
என்று ஒரு முறை உள்ளது .அது இன்னும்
தூதுவளை வேறு பெயர்கள்: தூதுவளை, தூதுளம்,
தூதுளை. தாவரப் பெயர்கள்: Solanum Trilubatum; இது ஊதாநிறப் பூக்களையும்,
உருண்டையான பச்சை நிறக் காய்கள் சுண்டைக் காய் மாதிரி இருக்கும். சிவப்புப்
பழங்களையும் வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய ஏறு கொடி.: வேர் முதல்
பழம் வரை எல்லா பாகமும்.பயன் உள்ளது. இலை கோழையகற்றும், உடல் தேற்றிக்
காமம் பெருக்கும். பூ உடலுரமூட்டும் காமம் பெருக்கும். காய் கோழையகற்றிப்
பசியைத் தூண்டி மலச்சிக்கல் அறுக்கும். பழம் கோழையகற்றும். தூதுவேளை இலையைப் பிழிந்து எடுத்து
சாற்றை 1 அல்லது 2 துளி காதில் விட்டால் காதுவலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை
குணமடையும். இலையை நெய்யில் வதக்கி துவையலாக
குழம்பாகக் கடைந்தோ சாப்பிட கபக் கட்டு நீக்கி உடல் பலமும் அறிவுத் தெளிவும்
உண்டாகும். இலைச் சாற்றை சம அளவு நெய்யில்
காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர என்புருக்கிக் காசம்
மார்புச் சளி நீங்கும். ஆஸ்துமா மூச்சுத் திணறலில் பழத்தூளைப்
புகைபிடிக்கச் சளி இளகி குணப்படும். தூதுவேளை இலையில் ரசம் வைத்துச்
சாப்பிடலாம். தூதுவேளை தோசை சாப்பிடலாம். தூதுவேளை கசாயம் குடிக்கலாம். தூதுவேளை உடல்வலிக் கோளாறு,
நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும். பூ இதை உட்கொண்டால் உடல் பெருக்கும்
, ஆண்மை பெருகும் வலிவு கிடைக்கும் காய் காயை உலர்த்தி தொடர்ந்து
சாப்பிட்டு வர குடல் நோய்கள் தீரும்.அழற்சி தீரும் .வாயு தொந்த்தரவு தீரும்.
பழம் இது மார்பில் இறுகிய சளியை நீக்கும்.இருமல் மூன்று தோஷம் நீக்கும்.பாம்பின் நஞ்சு நீக்கும் .
கருவேப்பிலை திரு.அ.சுகுமாரன் இந்தியாவில் காஷ்மீர் முதல்
கன்னியாக்குமரி எல்லா வகை உணவிலும் தவறாமல் இடம் பிடிப்பது கருவேப்பிலை ஆகும்.
இந்த கருவேப்பிலை இந்தியாவில் அதிகமாக விளையக்கூடியது. இது காடுகளிலும்,
மலைகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் பயிராககூடியா ஒரு பெருஞ் செடியின்
வகையைச் சார்ந்தது. எனினும் நாம் இதனைப் பொதுவாக சிறுமரம் என்றே கூறலாம். இது ஒரு சத்து நிறைந்த கீரையாகும். இதில் 63 சதம் நீரும், 6.1 சதவீதம் புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவீதம் நார்ச்சத்தும், 18.7 சதவீதம் மாவுச்சத்தும் இருக்கின்றன. இந்த கீரை 108 கலோரி சக்தியை கொடுக்கிறது. சுண்ணாம்பு சத்து. மக்னீசியம். மணிச்சத்து, இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் முதலியன சத்தும் இந்த தழையில் உண்டு. உயிர்சத்து மிகுதியாக உள்ள இந்த கீரையில் வைட்டமின் A 12.600 அனைத்துவகை அலகு கொண்டதாகும். உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்த த்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது. இந்த கீரை மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கவல்லது. கறிவேப்பிலை வேம்பு இலைப் போன்ற தோற்றமளிக்கும். ஆனால் கறி வேப்பிலை வேப்பம் இலையைப் போக் பச்சையாக இல்லாமல் சற்று கரும்பச்சை நிறமாக இருக்கும். மரத்தின் பட்டையும் சிறிது சுறுசுறுப்பாக இருக்கும். இதனாலேயே இதனைக் கறுவேம்பு என்பர். இதை ஒட்டியே வடமொழியில் ‘காலசாகம்’ என்ற பெயர் கருவேப்பிலைக்கு ஏற்பட்டுள்ளது. இதனைக் கால்க்ஸ் என்றால் செம்பு என்னும் பொருள்படக்கூடியது. இந்த மரம் செம்புநிறச் சாயல் உள்ள காரணத்தினால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு,
அவை நாட்டுக்கறிவேப்பிலை, காட்டுக்கறிவேப்பிலை என்ற இரு வகையாகும். நாட்டுக்
கறிவேப்பிலை உணவாகவும், காட்டுக்கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது.
காட்டுக் கறிவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும்
இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும், இனிப்பும்,
துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும். கருவேப்பிலை சாப்பிட்டால் கண்
பார்வைக்கோளாறு உங்களை அணுகாது. எலும்புகள் பலப்படும் சோகை நோய் வரப்பயப்படும்.
புண்கள் விரைவில் ஆற கருவேப்பிலை உதவுகிறது. வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலை சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும். வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப்போக்கும் குணம் கருவேப்பிலைக்குண்டு. மலச்சிக்கலைப் போக்கும், ஜீரணசக்தியைக்கூட்டும், பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தைக்கட்டுப்படுத்தி வாந்தி யைத்தடுத்து வயிற்றில் ஏற்படும் வயிற்று இரச்சலைத்தடுக்கும் ஆங்கிலம் - aaku means leaf சக்கரை வியாதிக்கு நல்ல மருந்து இதன் இலை சாறு என கண்டறியப்பட்டுள்ளது இதன் ஈர்க்கு, இலை பட்டை வேர் முதலியை யாவும் மருத்துவ குணம் உடையவை. ஈர்க்கு ,இலை பட்டை வேர் இவைகளை
கஷாயம் வைத்து சாப்பிட்டால் பித்தம் ,வாந்தி முதலியவை நீங்கும் இதன் .ஈர்க்கு
சுக்கு, சீரகம், ஓமம் இவைகளை தலா 24 கிராம் eduththu இரண்டு லிட்டர்
சுத்தமான தண்ணீரில் கொட்டி கால் படியாகும் வரை சண்ட காய்ச்சி குடல் வாயுவுக்கு கைகண்ட மருந்து. இலையை அரைத்து காலை மாலை கொட்டப்பாக்கு அளவு முன்று நாளுக்கு சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். உள்சூடு குறையும். கருவேப்பில்லையை இனி சமையலில் கண்டால்
ஒதுக்கி வைக்காதீர்கள் .முதலில் அதை சாப்பிடுங்கள். இது வரை நம்மை சுற்றி நமது
அருகே உள்ளே மூலிகைகளை பற்றி அதிகமாக எழுதி வருகிறேன். நத்தை சூரி , செங் குமரி , கரு ஊமத்தை
என அரிதில் கிடைக்கும் ,மிகத் தேடி கண்டுபிடிக்கவேண்டிய மூலிகைகள் இறுதியில்
வரும் இப்போது நம்மை சுற்றி உள்ள எளிய ஆனால் சக்தியில், மருத்துவ குணத்தில்
மிக உயர்ந்த மூலிகைகளை பற்றி தெரிந்து கொள்வோம் .இவைகளை பயன் படுத்த
ஆரபித்தாலே ஆரோக்கிய உடலுடன், உயிரை வளர்க்கும் முறையை அறியலாம். வீட்டுக்கு
ஒரு கறிவேப்பில்லை செடி மிக அவசியம்.
சிறு குறிஞ்சா எனும்
சக்கரைக்கொல்லி இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும்
முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் மதுமேகம் (நீரிழிவு நோய்) உடையவர்களுக்கு இது
ஒன்றன்பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைகிறது. மது மேகத்தினால் உடலில்
10 விதமான அவஸ்தைகள் தோன்றுகின்றன. இனி சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக்
கொல்லியின் மகத்துவம் பற்றிப் பார்ப்போம். இதில் நாம் பயன்படுத்த 10 வது
இலையாகும். இந்த இலையினை வாயில் இட்டு மெல்லும் போது இது இனிப்புச் சுவையை
நாம் அறிய விடாமல் செய்கிறது. இதுவே இதன், பயன்பாட்டிற்குத் தொடக்கமாக
இருந்திருக்கக் கூடும். மதுமேகம் மட்டுமல்லாது, கரப்பான், மலக்கட்டு,
வயிற்றில் ஏற்படும் நோய்கள், உடலில் இருந்து நீர் சரியாக வெளியேறாது இருத்தல்
மற்றும் ஈரல் நோய்களிலும் இதன் பயன்பாடும் இருந்துவந்துள்ளது. ஆயின்
முக்கியமாக இது மதுமேகத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. இது இந்திய மருத்துவ
முறைகளில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. சிறுகுறிஞ்சான் தென் இந்தியாவில்
அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மதுமேகம் ஆங்கில மருத்துவத்தில் இருபிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1.
இன்சுலின் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 2. இன்சுலின் தேவையற்றது இதில்
சிறு குறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையிலேயே அதிகமாக உள்ளது. சர்க்கரைக் கொல்லியின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் 1930களில் இருந்து உணரப்பட்டு வந்துள்ளது. சர்க்கரைக் கொல்லி இலை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பிசெல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த செல்களின் எண்ணிக்கையை சிறுகுறிஞ்சான் அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவையும் குறைக்கிறது. இந்த செயல்கள் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் ஜிம்னிக் அமிலமே காரணியாகும். இதுதவிர சிறுகுறிஞ்சான் குடலுறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது. ஸ்டீவியோ சைட்
நீரிழிவு நோயாளிகளும் இனிப்பாக
சாப்பிடலாம்! லத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயில்
ஸ்டீவியா இச்செடி அதிகமாக உள்ளது. அங்கு இவ்விலைகளை பொடிசெய்து சீனிக்குப்
பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். இப்போது உலக நாடுகள் பலவற்றிலும் சாகுபடி
செய்யப்பட்டு வருகிறது. இதன் மருத்துவ பலன்கள்: நீரிழிவு
நோய்க்கு பயன்படும் இயற்கை சர்க்கரை. மிக குறைந்த கொழுப்பு சத்து கொண்ட
சர்க்கரை உணவு. உணவு பொருட்களில் சேர்க்கப்படும் இயற்கை சர்க்கரை சுவை. ரத்த
கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை சீராக்கும். அழகு சாதன
பொருட்களில் ஸ்டீவியா பயன் படுகிறது. சரும நோய்களை தீர்க்கும் மருந்துகளில்
சேர்க்கப்படுகிறது. இருதய நோய் தொடர்புடைய மருந்துகளில் ஸ்டீவியா உள்ளது.
குளிர்பானங்களில் பயன்படுகிறது. இத்தகைய சீனித்துளசியை தற்போது
இந்தியாவில் பயிரிட மத்திய வேளாந்துறை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக
விவசாயிகள் சீனித்துளசியை விவசாய நிலங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும்
குறைந்த செலவில் வளர்க்கலாம். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண்ணில் நன்றாக
வளரும் தன்மை கொண்டது. உவர்ப்பு தன்மை தாங்கி வளரும் தன்மை இல்லாததால்,
தண்ணீர் தேங்கியுள்ள விவசாய நிலங்களில், போதிய வடிகால் வசதி இல்லாத நிலங்களில்
இச்செடியை சாகுபடி செய்ய முடியாது. சீனித்துளசியை அதிகமாக நோய் மற்றும்
பூச்சிகள் தாக்குவது கிடையாது. விற்பனை வாய்ப்புகள்: சீனித்துளசி முதல் ஆண்டில் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாயும், அடுத்த ஆண்டுகளில் குறைந்த செலவில் ரூ.2 லட்சம் வரையும் வருமானத்தை பெற்றுத்தரும். சீனித்துளசி இலைகளை உலர வைத்து பொடி செய்து இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், பழச்சாறுகள், ஊறுகாய்கள், ஜாம் ஆகிய பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு நுகர்வு சந்தைகளில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது.
துளசி - Ocimum sanctum
மூலிகைகளின் சொர்க்க பூமியான
பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால்
இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை
கண்டறிந்து சொன்னார்கள். பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த மூலிகைகளின் பயன்களையும் கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல்
இருக்கவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர்.
ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலிருந்தே இனம்புரியாத பல்வேறு நோய்களின்
பிடியில் மனித இனம் சிக்கித் தவிக்கின்றது. இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது
நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம். நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை. துளசி - Ocimum sanctum துளசி என்றால் தெரியாதவர் யார்? அதன்
மருத்துவ குணங்கள் ஏராளம். இதன் வேறு பெயர்கள்: தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum,
Linn Lamiaceae, Labiatae (Family) OCIMUM SANCTUM LINN. Family : Lamiaceae வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான். எளிதாகக் கிடைக்கும் அந்த துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். என்ன செய்வது ? அருகில் எளிதில் கிடைப்பதால் அருமை தெரிவதில்லை துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன்
தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, தொடர்பான பிரச்சினைகள் வரவே வராது.! துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை
தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்கவே
அச்சப்படும் ! ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும்
துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும். குளிக்கும் நீரில் முந்தைய நாளே
கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் நாற்றமா நாற்றமா
உங்களிடமா ? போயே போச்சு ! சோப்பு கூட துளசியில் செய்கிறார்கள்.
தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச்
செய்ய முடியும். துளசியை எலுமிச்சை சாறு விட்டு நன்கு
மை போல் அரைத்து தோலில் தடவி வந்தால் படை சொரி இருந்த இடம் தெரியாமல்
போய்விடும். சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி
விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான
அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும். இன்னும் சமீபத்திய அச்சுறுத்தலான
பன்றிக் காய்ச்சலை துளசி பன்றிக் காய்ச்சலை துளசி
குணப்படுத்தும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுவதாக செய்திகள் கூறிகின்றன . மூலிகைச் செடியான துளசி, பன்றிக்
காய்ச்சலைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது என்று ஆயுர்வேத நிபுணர்கள்
கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும்
திறமையும் அதற்கு உண்டாம். இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவ
நிபுணரான டாக்டர் யு.கே. திவாரி கூறுகையில், துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக்
கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள்
சமீபத்தில்தான் கண்டறிந்துள்ளனர். உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை மொத்தமாக
சீர்படுத்தக் கூடிய வல்லமை துளசிக்கு உண்டு. எந்தவிதமான வைரஸ் தாக்குதலும்
ஏற்படாமல் தடுக்கக் கூடிய வல்லமையும் அதற்கு உண்டு. வைரஸ் காய்ச்சல் வந்தால்
அதைக் குணப்படுத்தக் கூடிய வல்லமையும் துளசிக்கு உண்டு. ஜாப்பனீஸ் என்செபலாடிடிஸ் எனப்படும்
மூளைக் காய்ச்சலுக்கு துளசியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல
பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும், தடுக்கும் வல்லமையும் துளசிக்கு உண்டு. நோய் வராமல் தடுக்கும் சக்தி
மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு. பன்றிக் காய்ச்சல் வந்தவர்களுக்கு
துளசியை உரிய முறையில் கொடுத்தால் அது விரைவில் குணப்படுத்தி விடும். உடலின்
நோய் எதிர்ப்புத் தன்மையையும் அது பலப்படுத்தும் என்கிறார் திவாரி. டாக்டர் பூபேஷ் படேல் என்ற டாக்டர்
கூறுகையில், துளசியால் பன்றிக் காய்ச்சலை வராமல் தவிர்க்க முடியும். 20 அல்லது 25 புத்தம் புதிய துளசி
இலைகளை எடுத்து அதைச் சாறாக்கி அல்லது மை போல அரைத்தோ, வெறும் வயிற்றில் ஒரு
நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பன்றிக் காய்ச்சல் குணமாகும். இப்படிச் செய்வதன் மூலம் உடலில் நோய்
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பன்றிக் காய்ச்சல் நம்மை அண்டாது
என்கிறார். நோயின் தன்மை மற்றும்
தீவிரத்திற்கேற்ப துளசியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார் படேல். துளசிச் செடிகளின் வகைகளான கிருஷ்ணா
(ஓசிமம் சாங்டம்), வானா (ஓசிமம் கிராடிசிமம்), கதுகி (பிக்ரோரிசா குர்ரோவா)
ஆகிய நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கும் வல்லமை பெற்றவை. துளசியால் எந்தவிதமான பக்க
விளைவுகளும் கிடையாது என்பதும் முக்கியமான ஒன்று என்கிறார் படேல்.! நான் சொன்னால் நம்பமாடீர்கள் நம்
தாஜ்மகாலை பாதுகாக்க 10 லட்சம் துளசி செடிகள் உதவுகின்றன ! சிறந்த மருத்துவ குணங் கள் கொண்டதுளசி
செடி, தற்போது தாஜ் மகாலை சுற்றுப்புற மாசுகளால் ஏற்படும் தீய விளைவுகளில்
இருந்து பாதுகாக்க உதவுகிறது. உ.பி.,யின் வனத்துறை மற்றும் லக்னோவை
தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆர்கானிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்
நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக, காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மகாலைச்
சுற்றி 10 லட்சம் துளசி கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்கானிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் பொது மேலாளர் கிருஷ் ணன் குப்தா கூறியதாவது: தற்போது வரை 20 ஆயிரம் துளசி கன்றுகள் நடப் பட்டுள்ளன. தாஜ் மகாலுக்கு அருகில் உள்ள இயற்கை பூங்கா மற்றும் ஆக்ரா முழுவதும் துளசி கன்றுகள் நடப்பட உள்ளன.சுற்றுப்புறத்தை தூய் மைப்படுத்துவதற்கான சிறந்த செடிகளுள் ஒன்று துளசி. அதிகளவில் ஆக்சிஜனை வெளியிடும் தன்மை
துளசிக்கு உள்ளது. தொழிற்சாலை மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து
வெளியேறும் மாசுகள் இதனால் குறையும்.இவ்வாறு கிருஷ்ணன் குப்தா கூறினார். தொல்லியல் துறை கண்காணிப்பாளர் தேவிகா
நந்தன் திம்ரி கூறுகையில், "துளசி அதிகளவிலான ஆக்சிஜன் வெளியிடும், இது,
காற்றில் காணப்படும் மாசுகளைக் குறைக்க நிச்சயம் உதவும். காற்றை
சுத்தப்படுத்துவதன் மூலம், தொழிற்சாலை மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளால் தாஜ்
மகாலுக்கு ஏற்படும் பாதிப்பு குறையும்' என்றார். இத்தனை மதிப்பு வாய்ந்த துளசியை
இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள், புவியன்பு கொண்டோர் அனைவரும்
வீட்டுக்கு ஒரு துளசியும் சில மூலிகைகளும்
பொன்னாங்கண்ணி
பொன் அங்கே காணீர் என்பது தான்
பொன்னாங்கண்ணி என்ற பெயரில் ஒரு சாதாரண கீரையாக தெருவில் வைத்து
விற்கப்படுகிறது. புரதம், இரும்பு, சுண்ணாம்பு
சத்துக்கள் வைட்டமின் சீயும் நிறைந்த இந்தக் கீரை குளிர்ச்சி தரக் கூடியது.
பத்தியக் கீரை இது. உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலுக்கு பலம் தரவல்ல இந்தக் கீரை
சொறி சிரங்குகளை போக்கி மேனியின் அழகைக் கூட்டும். கண்கள் சம்பந்தமான நோய்கள்
அனைத்தையும் போக்கி நல்ல பார்வையைத் தரவல்லது இது, மூல நோய், மண்ணீரல்
பாதிப்புகள் போக்கும் தன்மை இதற்கு உண்டு. பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி
என்றும், நாட்டுப் பொன்னாங்கண்ணி எனவும் இரு வகை உண்டு. இதில் சீமை
பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுவது .மருத்துவ குணம் குறைவு
. பெச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங் குணங்கள் கொண்டது.
உடலுக்கு குறிச்சியை தரக்கூடியது. தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால்
பகலில் கூட நச்சத்திரம் காணலாம் என்பர் .கண்ணுக்கு அத்தனை நல்லது. இதற்கு அகத்தியர் கீரை, பொன்னாங்காணி,
சீமை பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் காணப்படும் இது
படர்பூண்டு வகையைச் சார்ந்தது. பொன்னாங்கண்ணிக் கீரையின் சாறு
எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக்
குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப்
பெறும். தினமும் உணவில் கீரையை சேர்த்து
வந்தால் நோயில்லா பெரு வாழ்வு வாழலாம் என்று ஆன்றோர்களும் சான்றோர்களும்
கூறியுள்ளனர். இன்று நாம் உண்ணும் உணவிலும்
சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக
கலந்துவிடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது. பொன்னாங்கண்ணிக் கிரையை நன்றாக அலசி
சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு
மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த
இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். அதிக வெயிலில் அலைந்து வேலை
செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும்,
சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில்
எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். பொன்னாங்காணி இலைகளை ஒரு கைப்பிடியளவு
எடுத்து அதிகாலையில் மென்று தின்று ஒரு டம்ளர் பால் குடித்து வர
உடல்குளிர்ச்சி அடைந்து கண் நோய் குணமாகும். பார்வை தெளிவடையும்.
தயிர்:
இன்று உலகெங்கிலும் தயிர் சாப்பிடுவது
அதிகரித்து வருகிறது. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான்
ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே
ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
பிரண்டை
பிரண்டை நாற்கோண வடிவ தண்டுகளையுடைய
ஏறு கொடி இனமாகும். பற்றுக் கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டு இருக்கும். சாறு
உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். சிவப்பு நிற உருண்டையான சிறிய சதைக் கனி
உடையது. கால் அடி முதல் அரை அடி வரை நீளத்தில் கணுக்கள் அமைந்து இருந்தால் அது
பெண் இனம் என்றும் அரை அடிக்கு மேல் ஓர் அடி வரை நீளவாட்டில் கணுக்கள் அமைந்து
இருந்தால் அது ஆண் இனம். அருள்மிகு மேகலாம்பிகை சமேத
சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், லலிதாம்பிகை கோயில் திருமீயச்சூர் பேரளம்
அருகே உள்ளது.ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு.
பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம்
செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை ஒரு காலத்தில்
சாபத்தால் பீடிக்கப்பட்டிருந்த சூரியன், இங்கு வந்து வழிபட்டு, தனது கருமை
நீங்கி, செவ்வொளி பெற்று இன்புற்றான். பிரண்டை இந்தியா, இலங்கை, வங்காள
தேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடியாகும். ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை,
முப உள்ளது்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை,
புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன. முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது. ஒரு
காயகல்ப்பம். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. சிலர் உடல் மெலிந்து காணப்படுவார்கள்.
எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை
நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம்
வலுப்பெறும். உடல் நன்கு தேறும். வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால்
வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத்
தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும். பெண்களுக்கு சூதக வலியின்போது
ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை
வெளியேற்றும் தன்மை கொண்டது. வேறுபெயர்கள்:
கிரண்டை அரிசணி. வச்சிரவல்லி. தாவரப்பெயர் -: VITIS QUADRANGULARIS. தாவரக்குடும்பம் - :VITACEAE. இது ஒரு சிறந்த கரு கலைப்பானாக நீண்ட
காலம் பயன்பாட்ட்டில் இருந்து வந்துள்ளது .எனவே தான் மனதிற்கு பிடிக்காமல்
போன மகனையோ ,மகளையோ அறிவிப்பு இந்த மூலிகை பற்றிய
விபரங்கள் அறிமுகமே .
பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448
நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும்
கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த மூலிகைகளின் பயன்களையும்
கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல் இருக்கவும் வழி வகை செய்தனர்.
இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப்
பருவத்திலிருந்தே இனம்புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் மனித இனம் சிக்கித்
தவிக்கின்றது. இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது
நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம். இந்த கட்டுரையில் ஓரிதழ் தாமரையின்
மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். இதன் இலை, தண்டு, பூ, வேர், காய்
அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது. உடல் வலுப்பெற சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய
முடியும் என்ற பழமொழிக்கேற்ப நல்ல ஆரோக்கியமான உடல் அமைந்தால்தான் நாம்
பிறந்ததின்பலனை அனுபவிக்க முடியும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட
ஓரிதழ் தாமரை மிகவும் பயனுள்ள மருந்தாகும். ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில்
உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும்
அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து
விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.
மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம்,
கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை
தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும். உடல் எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம்
சிறந்தது. இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில
பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது
நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ்
தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு
செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை (இலை,
தண்டு, வேர், பூ, காய்) நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும்
இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம்
தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம்.
இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
சோற்றுக் கற்றாழை - Aloevera
முருங்கை - Moringa oleifera
தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம்
கொஞ்சம் ஆக இழந்து வரும் பூமியில் முக்கிய வேதியப்பொருள்கள் -:
இலைகளில் ஸ்டிக்மாஸடீரால், மற்றும் ஏ-டெர்தைனில் மெத்தானால் மற்றும்
எக்லிப்டின், நிக்கோடின் ஆல்கலாய்டுகள் உள்ளன. 16 வகையான பாலி அசிட்டெலினிக்தை
யொபீன்கள் எடுக்கப் பட்டுள்ளன.
வேம்பு: வேம்பு இந்தியா முழுவதும் அனைவரும்
நன்கு அறிந்த மரம். தென்னிந்திய மக்களால் தெய்வமாய் போற்றப்படும். சக்திக்கு
உகந்த மூலிகையாக கருதப்படுகிறது . வேப்ப மரத்தால் சுகாதார கேடுகளையும்
, முருங்கை மரத்தால் பசிப் பிணியும் வராமல் தடுக்கலாம் என்பது நம் முன்னோர்
கருத்து. வேப்பமரத்தின் அடியில் அமர்வதும், அதன் மேல் பட்டு வரும் காற்றை
சுவாசிப்பதும் மக்களின் மனநிலையை சாந்தமாக்கும். மனம் அமைதி பெறும். வேம்பு இக்காலத்தில் உயிர்க்கொல்லி
மருந்தாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இதன் தொடக்கம், சிந்துவெளி
நதிக்கரை நாகரிக மக்களிடத்துத் தொடங்கியது என்பது, ‘சிந்துவெளி மக்கள்
வேப்பிலையைச் சிறந்த மருந்தாக இல்லங்கள் தோறும் பயன் படுத்தி
வந்திருக்கின்றனர், என்று அறிஞர் தீட்சித் கூறுவதிலிருந்து அறியமுடிகிறது. தமிழுக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள்
முதன்மையான தாகவும் தலை சிறந்ததாகவும் போற்றப் பெறுகின்ற தொல்காப்பியத்துள்
வேம்பும் கடுக்காயும் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டதைப் பற்றிய குறிப்புகள்
காணக்கிடைக்கின்றன. வேம்பும் கடுவும் போல வெஞ்சொல்
எனவரும் செய்யுளுக்கு, ‘முற்பருவத்துக் கைத்துப் பிற்பருவத்து உறுதி பயக்கும்
வேம்பும் கடுவும் போல வெய்யவாய சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்குமெனக்
கருதிப் பாது காத்து' எனப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரை வகுப்பர். போர்க்களத்திற்குச் செல்லும்
போர்வீரர்கள், மன்னர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள அடையாளப் பூக்களைத்
தங்கள் தலையில் சூடிக்கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. பழந்தமிழ் வேந்தர்களான சேரன்
பனம்பூவும், சோழன் ஆத்திப் பூவும்' பாண்டியன் வேப்பம் பூவும் சூடினர்.
இம்மூன்று பூக்களும் பூவையர் சூடுகின்ற பூக்களல்ல. இப்பூக்கள் எல்லாக்
காலங்களிலும் கிடைக்கக் கூடியனவும் அல்ல. கோடைக்காலங்களில் மட்டுமே கிடைக்கக்
கூடியதும் மருந்துப் பொருளாகக் கூடியனவுமான இவற்றின் பயன் கருதியே மன்னர்கள்
தங்களின் அடையாளப் பூக்களாகக் கொண்டிருக்கின்றனர். வேம்பம்பூவின்
தொடர்புவாழ்க்கை' இலக்கியம் ஆகியவற்றிலும் இடங்கொண்டிருக்கிறது எனலாம். மனையில் உள்ளவர்கள் நோய்வாய்ப்பட்டாலோ,
ஊரில் நோய்க்குறி காணப்பட்டாலோ, நோய்த் தடுப்பு முறையால் மனையையும் மனையைச்
சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மைப் படுத்துவர். அதைப் போல வெளிப்புறமிருந்து
நோய்க்கிருமிகள் மனைக்குள் புகாமல் மனையைப் பாதுகாக்கும் பொருட்டு, மனையின்
முகப்பில் வேம்பின் இலைகளைக் கொத்துக் கொத்தாகச் செருகி வைக்கும் பழக்கம்
இருந்திருக்கிறது. தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ
- இரவ மரத்தின் இலையுடன் வேம்பு மனைகளில் செருகப்பட்டதைக் குறிப்பிடக்
காண்கிறோம். அழகு சாதனப் பொருள் தயாரிப்பில்
சிறந்த கிருமி நாசினியாக சேர்க்கப்படுகிறது. இதன் இலைகள் மற்றும் வேர்கள்
நோய் எதிர்ப்புச் சக்தியும், தோல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தியும்
கொண்டவை. வைரஸ், பூஞ்சை, காளான் போன்ற கிருமிகளுக்கு எதிரானவை. காற்றில் கலந்து மிதந்து வரும் நுண்
கிருமிகளால் வரும் நோய்கள், வேம்பின் இலையால் விலகும். வேப்பிலையை அரைத்து
சாற்றை முகப்பருக்களுக்குத் தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால்
முகப்பருக்கள் அனைத்தும் உடைந்து காயத் தொடங்கும். வேப்பிலையால் கிருமிகள்
எல்லாம் செத்து மடிந்து மண்ணோடு மண்ணாகிவிடும். இது சீதளத்தை விரட்டி
உடம்பிற்குத் தேவையான சீதோஷ்ணத்தைக் கொடுத்து சமச் சீராக உடலை வைத்துக்
கொள்ளும். ஒரு பிடியளவு வேப்பிலையில் கசகசா,
கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மைபோல அரைத்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம்
கழித்து கழுவி வர அம்மை வடு மாறும். உடலில் ஏற்படும் ஒவ்வாமை நோய்க்கு இதன்
இலைச்சாறு நல்ல மருந்து. பசி குறைந்து உடல்
மெலிந்திருப்பவர்கள் வேப்பிலை ஒரு கைப்பிடியில் பூண்டு பத்துப்பல், சீரகம்
மூன்று சிட்டிகை சேர்த்தரைத்து இதை இரண்டு பகுதியாக்கி காலை, மாலை இம்மாதிரி
20 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுப் பிரச்னை தீரும். பசியைத் தூண்டும். மலர்கள் கடுமையான வயிற்று வலியையும்
போக்கும் குணம் கொண்டவை. வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால்
தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு முதலியவை தீரும். இதை தலையின் உச்சியில்
வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கி சுகமாக இருப்பதோடு கூந்தலும் செழித்து
வளரும். வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும்,
பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட
ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று
வேம்பு சிறப்பிக்கப்படுகிறது. சங்ககாலத்தில் ஊர்ப் பொது மன்றங்களில்
தான் அனைத்தும் நடைப்பெற்றன.பொது மன்றங்களில் பலா,வேம்பு முதலிய மரங்களின்
நிழலில் பாணர்,பொருநர் முதலிய இரவலர்கள் வந்து தங்குதலும்,அங்குள்ள மரங்களில்
தம் இசைக் கருவிகளைத் தொங்க விடுதலும் ம்ரபாகும். இச்செய்தியின் இரவலர் நாற்றுய வசிகூடு
முழவின்(புறம்,128-1,2) என்னும் புறநானூற்று அடிகள் மூலம்
அறியலாம் இங்ஙனம் ஊர்ப்பொது மன்றங்களில் பலர் கூடி வாதிடவும் கல்வி கற்கவும்
பயன்படுத்தப் பெற்றிருந்தது என்பதை ஊகிக்க முடிகின்றது. வேம்பின் அடியில்
அதிக கூட்டம் கொடிநாள்கூடினாலும் நோய் தொற்றும் வாய்ப்பு இல்லை என்று அன்றைய
VISITING பேராசிரியர்களான ஏழை புலவர்கள் அறிந்திருந்தனர் . வேப்பம்பூவைக் காய்ச்சி, இந்த
கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும
நோய்கள் நீங்கும். சித்தர்கள் இதன் பெருமைகளை
அறிந்தனர்.பயன்படுத்தினர் அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக்
கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள்
கண்டறியப்பட்டுள்ளன. இலை, பட்டை, விதையிலுள் தைலம்
பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என
கண்டறியப்பட்டுள்ளது. மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள்
இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும்
பயன்படுத்துகிறார்கள்.வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல்
இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
கண்டறிந்துள்ளது. வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப்
பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம்
என்கின்றனர். எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக்
கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும்
இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும்
கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர். நிலத்தின் அமிலத் தன்மையை
நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு
தன்னிகரற்றது.வேப்பம் பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக்
கட்டுப்படுத்துவதாக அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சுற்றுச் சூழலை பாதுகாத்து
நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை
வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக்
கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர். வெப்பம் புண்ணாக்கு இந்த பத்து
வருடத்தில் பத்து மடங்கு விலை ஏறிவிட்டாது .இனி வரும் காலம் organi விவசாயம்
வேம்பை பெரிதும் நம்பி இருக்கும் .ஆனால் நாம் மட்டும் இன்னும் சுவாரசியமாக
மானாட மயிலாட பார்த்து மழ்திருக்கிறோம் .. வேம்பு வெளியிடும் பிராகிபிடின்
என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும்
கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா
கண்டறிந்துள்ளனர். வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும்
பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்
உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள்
இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும்
பயன்படுத்துகிறார்கள்.வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல்
இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
கண்டறிந்துள்ளது. நிலத்தின் அமிலத் தன்மையை
நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு
தன்னிகரற்றது.வேப்பம் பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக்
கட்டுப்படுத்துவதாக அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சுற்றுச் சூழலை பாதுகாத்து
நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை
வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக்
கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர். வேம்பு வெளியிடும் பிராகிபிடின்
என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும்
கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா
கண்டறிந்துள்ளனர். வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும்
பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்
உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் இலை புழு, பூச்சிகளால் நேரிடும்
துன்பங்களை ஒழிக்கும். வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு
வர எந்த நோயும் அணுகாது. வேப்பிலைச் சாறு மற்றும் பழச்சாறு
கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும். அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால்,
மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால
ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல்
நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள், வேப்பங்கொழுந்தை நாள்தோறும் வெறும் வயிற்றில் நன்கு மென்று உண்டால் நோய்கட்டுப்படுகிறது. பல் ஈறுகளை வலுப்படுத்துகிறது. அங்கு தொற்றுநோய், வலி போன்றவை ஏற்படாதவாறு காக்கிறது. சிலருக்கு ஒற்றைத் தலைவலி இருந்துகொண்டே இருக்கும். அவர்கள் மஞ்சளுடன் வேப்பிலையையும் சேர்த்து மசிய அரைத்து தலைவலியுள்ள இடத்தில் பற்றுப் போட்டுக்கொண்டால் விரைவில் குணமாகும்.
வயிற்றில் ஏற்படும் கோளாறுகளை வலி,
ஏப்பம், செரிமானமற்ற நிலை போன்றவற்றை வேப்பம்பூ குணப்படுத்துகிறது. வேப்பம்பூவைத் தூய்மை செய்து,
நெய்யில் வறுத்து, மிளகு சீரகத் தூளுடன் சிறிதளவு உப்புச் சேர்த்து, சூடாக
உள்ள சாதத்தில் போட்டுச் சாப்பிட வேண்டும். உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு
துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும்.
காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம். வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த
மருந்து. உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது
கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும். அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை
கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும்.
கிருமியும் நெருங்காது ஆவாரை - ஆவரசு ஆவாரை பூத்திருக்க சாவாரைக்
கண்டதுண்டோ ! இதன் பூக்களை காயவைத்து காலையில்
ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம் . உடலில் தேய்த்து குளித்தால் சிலர்
மேனியில் வரும் மேனி வாடை போய் விடும். நமது உடலில் இருக்கும் பல மில்லியன்
செல்களிலும் சேரும் கழிவுகளை நீக்க முடியாமல் போகும் போதுதான் வியாதிகள்
வருகின்றன என்பது நமது கிழை நாட்டு வைத்திய தத்துவும்.இந்த செல்களில்
இருக்கும் ப்ரீ ராடிகால்சை நீக்க நமது பல மூலிகைகள் உதவுகின்றன. இது வெற்றியடைந்தால் செல்களுக்கு
அழிவில்லை .பின் என்றும் இளமைதான். நமது வீட்டில் கழிவு நீரில் அடைப்பு
ஏற்ப்பட்டு ஓடாமல் நின்றால் வீடு என்ன கதியாகும் .அதே கதிதான் செல்களில்
நீக்க வேண்டிய பகுதி நீக்கப்படாவிட்டால் நடக்கிறது. இது குறித்த ஒரு
ஆராச்சியின் முடிவுகள் இதோ!
நாயுருவி
நாயுருவி (Achyranthes aspera) ஒரு
மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வரை நிமிர்ந்து
வளரும் இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. எதிர் அடுக்குகளில் அமைந்த காம்புள்ள
முழுமையான இலைகளையும் நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி இனமாகும். இது இரண்டு
அடி வரை வளரக் கூடியது. இதன் தண்டு, காம்பு செந்நிறம் உடையதாக இருக்கும். இதன்
எல்லாப் பாகங்களும் மருத்துவக் குணம் உடையவை. சிறுநீர் பெருக்கவும், நோயை
நீக்கி உடலைப் பலப்படுத்தவும், சதை, நரம்புகளைச் சுருங்கவும் செய்யும்
மருத்துவக் குணம் உண்டு. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் எல்லா இடங்களிலும்
தானாகவே வளர்கின்றது. தெருவோரங்களில் தானே வளர்ந்து
காணப்படும் நாயுருவிச்செடி ஹோமத்தில் எரிக்கவும் பயன்படும் தெய்வீக மூலிகை.
ஹோம் வளர்க்கும் ஒன்பது வகை விறகுக்
குச்சிகள், அவை : (1) முருக்கு, (2) கருங்காலி, (3) நாயுருவி, (4) அரசு, (5)
அத்தி, (6) மா, (7) வன்னி, (8) ஆல், (9) இத்தி என்பன.
இதில் இருந்து நாயுருவி வேத காலத்தில்
இருந்து மனித பயன் பாட்டில் இருந்து வந்தது தெரிகிறது. Common name: Prickly Chaff Flower,
Chaff-flower, Crocus stuff, Crokars staff, Devil's horsewhip • Hindi:
चिरचिटा Chirchita, लटजीरा Latjira • Manipuri: খুজুম্পেৰে Khujumpere •
Sanskrit: अपामार्ग Apamarga வேறு பெயர்கள்: அமராரவம்,
கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம், சிவந்த ஞாயிறு, பரமாரி,
பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி,
நாயுருஞ்சி. செந்நாயுருவி என்னும் இந்தவகையின்
தண்டும் இலையும் சிவந்து காணப்படும். மருத்துவக் குணம் பெரும்பாலும் இதற்கு
அதிகமாகவே காணப்படுகின்றது. ஆங்கிலத்தில் இதை Achyranthes aspera,
Amarantaceze மலச்சிக்கல், பசியின்மை, செரிக்காமை
(அசீரணம், அறாமை) போன்றவற்றுக்கு மருந்தாகிறது தேள் கடியினாற் பாதிக்கப்பட்டோரைக்
குணமாக்க நாயுருவியின் இலைச் சாறு பயன்படுகிறது. காதுவலி, பல்வலி, சிறுநீரடைப்பு
போன்றவற்றுக்கான மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை
நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து
பற்களைப் பாதுகாத்து பளிச்சென்ற வெண்மை நிறத்தைக் கொடுப்பது நாயுருவி என்னும்
அற்புத மூலிகை ஆகும். நாயுருவிச்செடியை வேருடன் பிடுங்கி
நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக்கொண்டு பல் துலக்கப்
பயன்படுத்தலாம். நாயுருவி பற்பொடியும் தயாரித்துக்கொள்ளலாம். நாயுருவிச்செடியினால் பல் துலக்கமுக
வசீகரம் பெறும். நாயுருவி பற்பொடி செய்யவும் பயன் படுகிறது .இதில் பலபோடி
செய்து வியாபாரம் செய்யலாம் .சிறந்த வாய்ப்பு உள்ளது .பல் துலக்கதவர்கள் யார்
? எனவே உபயோகிப்போர் அதிகம் .பொருள் மிகுந்தோர் நாயுருவி டூத் பேஸ்ட் செய்து
உலக சந்தையை குறிவைக்கலாம் . வளமான தமிழன் தான் வலிமையான தமிழன் . பல் போடி செய்யும் முறை உலர வைத்து தூசி, கொட்டை நீக்கி பொடி
செய்து மெல்லிய துணியில் சலித்து வைத்துக்கொள்ளவேண்டும். இதைக்கொண்டு தினமும்
இரு முறை பல் துலக்கி வர பல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன் பற்கள்
பளபளவென மின்னும். நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை
பாலில் அரைத்து உட்கொண்டால் பசியே எடுக்காது .எத்தனை நாட்கள் வேண்டுமானாலும்
,உணவுக்காக நாட்டிற்கு வராமல் காட்டிலேயே மனிதர் கண்ணில் படாமல் இருக்க இயலும்
. நாயுருவி இலைகளில் அதி காலையில்
நன்றாகப் பனித்துளி பட்டுள்ளதைப் பறித்து அங்கேயே கையால் கசக்கிப் பிழிந்த
சாற்றை தேமல், பற்று, படை, சொறிகளுக்கு மேல் பூச்சாக பூசி வர குணமாகும். நாயுருவி இலையைக் கசக்கித் தேள்
கடிபட்ட இடத்தில் அழுத்தமாகத் தேய்க்க விஷம் இறங்கிவிடும். நாயுருவி இலையை 10 கிராம் எடுத்து
அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து 2 வேளையாக 10 நாட்கள் குடித்து வர இரத்த
மூலம் குணமாகும். நாயுருவி இலையோடு குப்பை மேனி
இலையையும் சம அளவாக எடுத்து கசக்கிச் சாறு எடுத்து தேள் கடி பட்டவர்களுக்கு
கடிபட்ட வாயில் தேய்க்க கடுகடுப்பு நீங்கி விஷம் இறங்கிவிடும். நாயுருவி வேர்ப்பட்டை, மிளகு சம
அளவாக எடுத்துப் பொடி செய்து 1/4 கிராம் எடுத்து சிறிது தேனில் கலந்து இருவேளை
சாப்பிட்டு வர இருமல் குணமாகும். நாயுருவி விதையை 10 கிராம் எடுத்து அரைத்து
2 வேளை 2 நாட்கள் சாப்பிட்டு வர பேதி நிற்கும். நாயுருவி விதையை நிழலில் காய வைத்து
இடித்துப் பொடியாக்கி 20 கிராம் எடுத்து, துத்திக் கீரையை வதக்கும் போது
சேர்த்து உணவுடன் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூலமும் குணமாகும்.
நாயுருவி விதையைச் சோறு போல சமைத்து உண்ண பசி எடுக்காது. ஒரு வாரம் ஆயாசம்
இல்லாமல் இருக்கலாம். பின்னர் மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்க
பசி உண்டாகும். நாயுருவி வேர் மற்றும் பட்டையைக்
கொண்டு பல் துலக்கப் பல் தூய்மையாகி முகம் வசீகரம் ஆகும். நாயுருவி சமூலமும்,
வாழைச் சருகும், மூங்கில் குருத்தும் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர்
நீரில் போட்டு 400 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 200 மில்லியளவு 2 வேளை
குடிக்க, பெண்களின் வயிற்றிலுள்ள அழுத்தத்தை வெளியேற்றும். நாவறட்சி நீங்கும். விதையை சாப்பிட்டால் ஒரு வாரம்வரை
பசி இருக்காது. மீண்டும் பசி எடுக்க, சிறிதளவு மிளகு எடுத்து அதை வறுத்து
இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி
குடிக்கவும். 20 கிராம் விதையை பவுடராக்கி துத்திக்
கீரையில் கொதிக்க வைத்து காலை உணவில் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூலம்
குணம் பெறும். 10 கிராம் விதையை அரைத்து இரண்டு வேளை சாப்பிட்டால் பேதி குணம் பெறும். சிவப்பு, வெள்ளை நிறம் இரண்டு வகை நாயுருவி இருக்கின்றன. இரண்டும் பயன்படுத்தலாம்.
|
Copyright ©2006-2012 darulsafa.com All Rights Reserved. |