Ulcer to Cancer, Acupuncture is an Answer!

Home

Photos

Health Articles

Contact us

 

மாற்று முறை மருத்துவ விழிப்புணர்வு தொடர்

துளைப்புள்ளி மருத்துவம் ( அக்குபங்சர் )

மருத்துவர் எம். சாதிக், HHA., ND., RNMP., LEM., MD (Acu) Ph.D (Acu)

2 ஆண் 1 பெண் என எனக்கு 3 குழந்தைகள் பிறந்தன. அந்த 3 குழந்தைகளும் (Spinal Muscular Atrophy ) SMA நோயின் மரபணு பாதிப்பால் 3 வயதிற்குள் மரணமடைந்து விட்டன;. அப்போது தான் நான் விழிப்புணர்வு பெற்றேன். இதற்கு என்ன தீர்வு என தேடி "அக்குபங்சர்" மருத்துவத்தைப் பற்றி ஆராய்ந்த போதுதான் விடை கிடைத்தது.

பிரதான மருத்துவத்தில் இதற்குச் சிகிட்சை கிடையாது. உடனே அக்குபங்சர் மருத்துவரைத் தேடிப்போவதை விட நாமே படித்தால் இதற்கு விடை கிடைக்கும் என்ற ஆர்வத்தில் படித்து முடித்து, எனது மனைவிக்கு கர்ப்பமாயிருக்கும் போது நானே அக்குபங்சர் சிகிட்சை கொடுக்கத் தொடங்கினேன். அதில் மரபணு சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளையும் கர்ப்பிணிகளின் 4-6மாத சிகிச்சையில் இறைதுணையால் சரிசெய்துவிடலாம்.

என் மனைவி கர்ப்பமாயிருக்கும்போது எந்த மருத்துவரிடமும் கொண்டு செல்லவில்லை. எந்த மருந்தும் கொடுக்கவில்லை ஸ்கேனும்; எடுக்கவில்லை. இறுதியில் பிரசவத்திற்கு மட்டும் பல விதிமுறைகளோடு மருத்துவமனை சென்று இறைவன் கிருபையால் நல்ல முறையில் குழந்தைகள் பிறந்தன. இப்போது எனக்கு ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. பெண் குழந்தை 6 வயதாகிறது. மகனிற்கு 4 வயதாகிறது. இரு குழந்தைகளுக்கும் இன்று வரை எந்த தடுப்பூசியும் போடவில்லை. இறைவன் அருளால் முழுக்க முழுக்க அக்குபங்சரின் அற்புதம் தான் என்பதை கூறிக் கொள்வதில் சந்தோஷப்படுகிறேன். அதற்குப்பிறகு நான் இதை மக்களுக்கு விழிப்புணர்வூட்டத்தொடங்கினேன்.

இறைவன் தனது படைத்த படைப்பிலேயே மனிதனைத் தான் சிறந்த படைப்பாக படைத்து இயற்கை அனைத்தையும் மனிதனுக்கு கட்டுப்பட வைத்து வாழ்க்கையை சுவைக்கச் செய்தான். ஆனால் மனிதனின் புதுபுது கண்டுபிடிப்புகளால் இரசாயன உரம்தொழிற்சாலைக் கழிவுகளால் நிலமும் நீரும் மாசுபட்டு மனிதனின் ஆரோக்கியம் இன்றைய காலக்கட்டத்தில் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. எந்த அளவு தனது உடலைப் பேணிப் பாதுகாத்தாலும் நிலம் , நீர் , உணவு , காற்றின் மாசிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வது கடினமாக உள்ளது.

நமது இன்றைய வாழ்க்கை முறை மாறுபட்டதால் கண்ட நேரங்களில் சாப்பாடு முறைகளை நாமே வகுத்துக் கொண்டதால் தொற்றி பரவாத சர்க்கரை நோய் ,இரத்தக் கொதிப்பு ,இருதய நோய் ,புற்றுநோய் போன்றவைகளினால் இன்று இளம் வயதிலேயே பாதிப்பிற்குள்ளாகி மரணவாயிலில் திணறிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

பிரதான மருத்துவமுறையில் இன்று 51 நோய்களுக்கு எந்த தீர்வுமில்லை. சர்க்கரை நோய்க்கும் இரத்தக் கொதிப்பிற்கும் வாழ்க்கை முழுவதும் மருந்து சாப்பிட கூறுகிறார்கள். இறுதியில் இன்சுலின் அடிமைக்கும், சிறுநீரக இழப்பிற்கும் ஆழாக்குகிறார்கள்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். மருந்தும் விருந்தும் 3 நாட்கள் தான். சர்க்கரை நோய்க்கு தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தால்; இறுதியில் இன்சுலின் எடுக்க கூறுகிறார்கள். இதை வைத்தே நோயின் தன்மை கூடுகிறதா? குறைகிறதா என நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இறுதியில் சிறுநீரகம் பாதிப்படைந்து அதற்கும் மருத்துவம் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம்.

எந்த ஒரு மனிதனுடைய சிறுநீரகமும் தானாக கெட்டுப் போவதில்லை. மருந்து , மாத்திரைகள் நிறைய உட்கொண்டு அதன் பக்கவிளைவுகளால் சிறிது சிறிதாக சிறுநீரகம் பழுதடைகிறது. அப்படியென்றால் இதற்கு என்ன தான் தீர்வு என நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

அக்குபங்சர் சிகிச்சை முறை பிரதான மருத்துவத்திலிருந்தும் மற்ற மருத்துவ முறைகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டு செயல்படுகிறது. நமது உடலில் பலவகை தசைகள் உண்டு. பார்ப்பதற்கு தலை முதல் கால் வரை ஒரே தசையால் மூடப்பட்டுள்ளது போல் தெரியும். ஆனால் தலையில் ஒரு தசை முகத்தில் வேறு தசை உள்ளங்கையில் ஒரு தசை அதன் புறங்கையில் இன்னொரு தசை இப்படியாக ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. இது இறைவனுடைய படைப்பின் அதிசயம். அதுபோல் ஒவ்வொரு வியர்வைத் துவாரத்திற்கும் (சக்தி புள்ளிக்கும்) அதன் பக்கத்திலுள்ள அடுத்த வியர்வைத் துவாரத்திற்கும் (சக்தி புள்ளிக்கும்) அதன் தன்மைகளில் வேறுபாடு உண்டு.

மிக முக்கியமாக ஒவ்வொரு வியர்வைத் துவாரமும் ஒரு குறிப்பிட்ட மின்அலையை ஈர்க்கக் கூடியதாக உள்ளது. உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் தனக்குத் தேவையான சக்தியை தோலின் ஒரு குறிப்பிட்ட நேர்க்கோட்டிலுள்ள வியர்வைத் துவாரங்களின் மூலமாக ஈர்த்துக் கொள்கிறது.

உடலில் எந்த தசை பாதிக்கப்பட்டுள்ளது எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளதுää இந்த பாதிப்பானது தோலில் எந்த குறிப்பிட்ட வியர்வைத் துவாரங்களில் ஈரப்பதம் குறைந்து வறட்சி ஏற்பட்டதன் காரணமாக உருவாகியுள்ளது என்பதைக் கண்டறிவார்கள்.

அதன் பிறகு அந்த வியர்வைத் துவாரத்தினுள் மின்காந்த சக்தியை வேகமாகக் கடத்தக்கூடிய ஏதேனும் ஒரு உலோகத்திலான மயிரிழையினும் மெல்லிய ஊசியை செருகுவதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள உடல் உறுப்புகளை மீண்டும் புதுத்தெம்புடன் இயங்க வைக்க முடியும். இதுவே அக்குபங்சர் சிகிச்சை முறையின் தத்துவமும் அணுகுமுறையும் ஆகும். இது 100 % பக்க விளைவற்றதும் பாதுகாப்பானதும் கூட.

பிரதான மருத்துவ முறையில் இரத்தம் , சிறுநீர் ஸ்கேன் செய்து பார்த்து சிகிச்சை செய்வார்கள். அக்குபங்சரில் 12 உறுப்புகளின் செயல்பாடு எப்படி உள்ளது என நோயாளியின் நாடி பார்த்தே துல்லியமாக ஒரு சில நிமிடங்களிலே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும். பிரதான மருத்துவ முறையில் ஒரு மருந்து கொடுக்கும்போது பக்கவிளைவு ஏற்பட்டு 9 வியாதிகள் அதனுடன் சேர்ந்து வரும். ஆனால் அக்குபங்சரில் ஒரு ஊசி போடும்போதுää உடலிலுள்ள 9 அல்லது அதற்கும் மேற்பட்ட நோய்கள் உடலிலிருந்து விடுபடுவதை நம்மால் உணர முடியும்.

நோயாளி ஒருவரின் தோலிலுள்ள பல லட்சக்கணக்கான வியர்வைத் துவாரங்களில் எந்த வியர்வைத் துவாரத்தின் ஈரப்பதம் குறைவின் காரணமாக அவருக்கு நோய்கள் தோன்றியுள்ளன என்பதைக் கண்டறிவதில் தான் ஒரு அக்குபங்சர் மருத்துவ நிபுணரின் திறமை அடங்கியுள்ளது. இது தற்போதுள்ள நானோ தொழில் நுட்பத்தை விட முன்னேறியது என நானோ தொழில் நுட்பவியலாளர் ஒருவர் கூறியுள்ளார்;.

இந்த அக்குபங்சர் மருத்துவம் நமது உயிர் சக்தியை வலுவாக்கி தக்க வைக்கும். உயிர் சக்தியை ஓட்டப்பாதையில் கொடுக்கக்கூடிய பக்க விளைவுகளற்ற மருத்துவ முறையாகும்.

இது பிறந்தக் குழந்தை முதல் மரண தருவாயிலிருக்கும் நோயாளிக்கு கூட செய்ய முடியக்கூடிய; பாதுகாப்பான சிகிச்;சை முறையாகும். காச நோய் , எக்ஸிமா உள்ளிட்ட பல்வேறு முற்றிய நிலை தோல் நோய்கள் , பக்க வாதம் ,இரத்த அழுத்தம் ,சிறு நீரக பழுது ஆகியவற்றிற்கும் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அல்லாஹ் உதவியினால் பல நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மனநோயாளிகளை அக்குபங்சரால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

இது உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமுறையாகும்.

முன்பதிவிற்கு மருத்துவரின் செல்பேசி எண்கள் :9443389935, 8903333300

மின்னஞ்சல் : sathick@gmail.com

 

Copyright ©2006-2016 darulsafa.com 

All Rights Reserved.