۩ மருத்துவ குணமுள்ள நெல்லிக்காய்

۩ சித்த வைத்திய குறிப்புகள

۩ சர்க்கரை நோய்க்கு பிஞ்சு முட்டைக்கோஸ் அருமருந்து

۩ ஞாபக சக்திக்கு கெழுத்தி மீன

மருத்துவ குணமுள்ள நெல்லிக்காய்

நெல்லி மரம் ஒரு சிறிய மரம். இமாலயப் பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் அதிகமாக வளர்கிறது. தமிழகத்தில் வளரும் நெல்லிக்காய் சிறியளவில் கொஞ்சம் துவர்ப்பும், புளிப்பும் அதிகம் கொண்டதாக இருக்கும். வடநாட்டில் வளரும் நெல்லி பெரிதாக இருக்கும்.

பல மருத்துவக் குணங்களும் சேர்ந்து இருப்பதாலேயே நெல்லியை அனைவரும் உயர்வாகப் புகழ்கிறார்கள்.

 

நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள்.தண்ணீர் இனிப்பாக மாறிவிடும்.

 

 

 

பெரியளவில் உள்ள நெல்லிக்காய் ஊறுகாய்க்கும், நெல்லி மொரப்பா செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். சிறியதை ஆயுர் வேத மருந்துகள், ஆயுர்வேத லேகியம் முதலியவை செய்ய பயன்படுத்துகிறார்கள்.

 

 

 

தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்து ணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக் காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.

 

 

 

ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.

 

 

 

உடல் சதை பலப்படும். நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.

 

 

 

ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது. உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும்.

 

 

 

நல்ல சுத்தமான தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களைப் போட்டு ஊறவைத்து அந்தத் தண்ணீரை எடுத்து கண்களை அகல விரித்து கழுவவும். கண்ணுக்குச் சிறந்த மருந்து இது. கண் சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை குணப்படுத்தும்.

 

 

 

அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.

 

 

தரமான தலைசாயங்களில் நெல்லிவிதையைத் தான் பயன்படுத்துகிறார்கள். நெல்லி மரத்தின் தண்டிலிருந்து, அதன் இலை, காய், பழம் உட்பட எல்லாமுமே கறுப்புத் தன்மை கொடுப்பதால் மை, தலைசாயம், தோல்களை வண்ணப்படுத்த உதவுகிறது.

 

 

 

தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும்போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லிமரமாம்.இத்தனை உபயோகமுள்ள ஒரு மரத்தை தெய்வீக மரம் என்று சொல்லலாமே......

source: http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=3501&Itemid=117

 

சித்த வைத்திய குறிப்புகள்

கண் சூடு:- நெல்லிக்காய் சாறு பிழிந்து இரு வேலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணமாகும்.

காது வலி:-

நல்லெண்ணெயில் வெள்ளைப்பூண்டு,பெருங்காயம்.கற்பூரம் போட்டுக் காய்ச்சி தினசரி 3 வேளை இரண்டு சொட்டு விட்டு வந்தால் குணமாகும்.

தொண்டை வலி:-

விளக்கெண்ணெய்,சுண்ணாம்பு கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் தொண்டையில் தடவி வர குணமாகும்.

 

 

 

வாய்ப்புண்:-

 

 

நெல்லி,மா இலைச்சாறு நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கவும்.

 

 

ஜலதோசம் நீங்க:-

 

 

 

துளசி சாறு, இஞ்சி சாறு சம அளவு கலந்து குடிக்கலாம்.

 

 

 

இருமல் குணமாக:-

 

 

 

மஞ்சள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு பாலில் சேர்த்து இரவில் பருகி வர இருமலைக் கட்டுப்படுத்தும்.

 

 

 

நாக்குப்புண்:-

 

 

தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து பருகலாம்.

 

 

 

பற்கள் உறுதி பெற;-

 

 

மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிடலாம்.

 

 

 

நல்ல தூக்கம் வர:-

 

 

சீரகத்தை வறுத்துப் பொடி செய்து வாழைப் பழத்துடன் சாப்பிடலாம்.

 

 

பசியைத் தூண்ட:-

பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வர பசியின்மை நீங்கும்

தொகுப்பு:

 

 

 

ர.ஜெயலெட்சுமி MA, M.ED.,

திருப்புத்தூர்.

 

                                   சர்க்கரை நோய்க்கு பிஞ்சு முட்டைக்கோஸ் அருமருந்த

நீங்கள் சர்க்கரை நோயாளியா? இனி கவலை வேண்டாம். தினமும் "பிஞ்சு' முட்டைக்கோஸ் (ஆரஞ்சு பழ அளவிலிருந்து சற்று சிறியதாக இருக்கும்) தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் உறுப்பு பாதிப்புகளை தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமானால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்கள் பாதிப்படையும். அதனால் மாரடைப்பு ஏற்படும். அதே போல் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டால் வலிப்பு ஏற்படும்.

இவற்றுக்கு காரணம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே செல்வதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. அதன் மூலம் மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

 

"பிஞ்சு' முட்டைக்கோஸ் தொடர்ந்து சாப்பிடுவதால் மாரடைப்பு மற்றும் வலிப்பு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்ததை இதற்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

 

 

 

இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் பால் தோர் நல்லே தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் பிஞ்சு முட்டைக் கோஸினால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

 

 

 

பிஞ்சு முட்டைக்கோஸில் உள்ள ?நன்ப்ச்ர்ழ்ஹல்ட்ஹய்ங் எனும் புரதச்சத்து, உடலில் செரிமானம் செய்யும் உறுப்புகளை மேலும் தூண்டச் செய்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, ரத்தக் குழாய்கள் பாதுகாக்கப்படுவதுடன், உயிரணுக்கள் பாதிப்படைவதையும் தடுக்க செய்கிறது.

 

 

 

ரத்த நாளங்களில் ஏற்படும் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொண்ட பரிசோதனை மூலம் இது தெரிய வந்தது.  

 

ஞாபக சக்திக்கு கெழுத்தி மீன்

கெழுத்தி போன்ற கொழுத்த மீன்களின் இறைச்சியை சாப்பிடுவதால்,நினைவு மறதியை தவிர்ப்பதோடு, பக்கவாத அபாயத்தை குறைக்கும் என்று பின்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கெழுத்தி போன்ற கொழுத்த மீன்களை சாப்பிடும்பொழுது, அவற்றை வேக வைத்து சாப்பிடவேண்டும்.வறுத்து சாப்பிடுவாதால் இந்த பயன்கள் கிடைக்காது.

இந்த வகை மீன்களின் இறைச்சியில் ஒமேகா-3 என்ற அமிலச்சத்து உள்ளது.நினைவாற்றல் குறைவு நோயை இது தவிர்க்கிறது, அதே போல,பக்கவாத அபாயத்தையும் குறைக்கிறது. அக்குரோட் போன்ற கோட்டைகளிலும் இதர உணவுகளிலும் ஒமேகா- அமிலச் சத்து உள்ளது.இந்த மாதிரியான உணவுகள் இதய நோயைகளையும் தடுக்கிறது.

 

Refer this page to your friends / relatives