கர்ப்பிணிகளுக்கான உணவுக் குறிப்புகள்

தர்லா தலால்

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்பம் என்பது மிகவும் சந்தோஷமான காலம் ஆகும். கர்ப்ப காலத்தில் நல்ல சமச்சீரான உணவை பராமரிப்பது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் மிகவும் முக்கியமாகும். நீங்கள் இவ்வாறு செய்ய உங்களுக்கு உதவ இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு வேண்டிய அளவு சாப்பிடுங்கள். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள், நோயாளி அல்ல என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். எனவே இந்த ஒன்பது மாதங்களை அனுபவித்து மகிழுங்கள்.

bullet

நீங்கள் அசௌகரியமாக உணர்வதைத் தடுக்கும் வகையிலான லைட் ஆனால் ஊட்டச்சத்துகள் நிரம்பிய உண்வை சாப்பிடுங்கள். நீங்கள் பாலக் பன்னீர், மேத்தி ரோட்டி அல்லது பீன் சூப் சாப்பிட்டுப் பாருங்கள்.

bullet

அதிகமாகத் தாளித்துக் கொட்டிய மற்றும் அதிகமாக மசாலா உள்ள உண்வுகளை சாப்பிடாதீர்கள். அவை குமட்டலை அதிகரிக்கின்றன். வெள்ளரி மற்றும் தயிர் சோறு போன்ற மிதமான சுவையுள்ள உணவை சாப்பிடவும்.

bullet

கர்ப்ப காலத்தில் அதிக அளவு இரும்பு சத்து மிகவும் முக்கியமாகும். ராஜ்மா சாக்வாலா போன்ற பண்டம் ஆரோக்கியமான இரும்பு சத்து அளவை பராமரிக்க உதவும்.

bullet

கால்ஷியம் அதிகமாக சாப்பிடவும். இது தாய்ப்பாலுக்கு நன்மை அளிக்கக்கூடியது மற்றும் குழந்தையின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்குத் தேவையானது. ஈஸி சீஸ் பாஸ்தா போன்ற பண்டத்தை தயார் செய்ய மற்ற உணவு வகைகளுடன் கால்ஷியம் உள்ள உணவை சேர்க்க முடியும்.

bullet

உங்கள் உணவில் உள்ள நார்சத்து மலச்சிக்கலை அகற்ற உதவுகிறது. பழங்கள், கீரை வகைகள் மற்றும் முழு கோதுமை தயாரிப்புகள் போன்ற இயற்கையான அன்ப்ரோஸெஸ்ட் உணவை சாப்பிடவும். கொய்யாப் பழத்தில் நார்சத்து அதிக அளவில் உள்ளது. இது உங்கள் மலச்சிக்கலுக்கு உதவும் என்பதால், இதை நிச்சயமாக சாப்பிடவும்.

bullet

உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு ஜிங்க் மிகவும் முக்கியமானது. தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் ப்ராக்கேலி மற்றும் கீரை போன்ற பச்சிலை வகைகளை தினமும் முறை தவறாமல் சாப்பிடுவதிலிருந்து தேவையான ஜிங்க் அளவை நீங்கள் பெற முடியும்.

bullet

திரவங்கள் குடித்துக் கொண்டிருக்கவும். உங்கள் உடலில் நீர் தேங்கம் பாதிப்பு இருந்தாலும் கூட நீங்கள் தினமும் குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் உண்வின் பிற்சேர்க்கையாக பழரசங்கள், சூப், மோர் மற்றும் இளநீர் பயன்படுத்துங்கள். இவற்றில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் உள்ளன மற்றும் உடனடியாக சக்தி அளிக்கின்றன.

bullet

உங்கள் கடைசி மூன்று மாதகாலத்தில், நிறைய பூண்டு, வெந்தயம், சப்ஜா, பால் மற்றும் பாதாம் கொட்டை சாப்பிடவும். இவை கலக்டோகாக் உணவு எனப்படுகின்றன. அதாவது இவை முலைப் பாலை ஊக்குவிக்கின்றன எனப் பொருள் ஆகும்.

           

Refer this page to your friends / relatives