நமது சிகிட்சையில் பின்பற்றவேண்டியவை

  •    ஒருவரது உடலில் வரும் நோய் எதனால் வந்தது? என்ன மருத்துவம் எடுப்பது? அந்த நோய் மற்றும் எந்த நோயும் உடலில் வராமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள என்ன கடைபிடிக்க வேண்டும்? என்பதைத் தெரிந்து கொண்டால், சுகமான, நிம்மதியான இறைவன் நாடினால் நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

  • .

  • 1. உணவு:

  •  

  • சாப்பிடுவதற்கு முன் கை, கால் மற்றும் முகம் கழுவ வேண்டும். மலம், ஜலம் இருந்தால் அதையும் அகற்றிவிட்டு அமரவும். உண்டபின்பு உடனே மலம், ஜலம் கழிக்கக் கூடாது (அப்படியிருந்தால் அது நோய்).

  • சாப்பிடும்போது "பிஸ்மில்லாஹ்" சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.

  • பசித்தால் மட்டும் சாப்பிட்டால் போதும் (பசித்து புசி).

  • முதலில் இனிப்பு சாப்பிட்டுவிட்டு, உணவு உட்கொள்ளவும். (இனிப்பு சாப்பிட்டபின்பு நீர் அருந்தக்கூடாது).

  • சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பும்,பின்பும், இடைவெளியிலும் நீர் பருகக்கூடாது. சாப்பிட்டு அரை மணிநேரம் கழிந்தபின் நீர் அருந்தலாம்.

  • உணவு உட்கொள்ளும் நேரம் மட்டும் வாயைத்திறந்து, உணவை மெல்லும் போது வாயை அடைத்துக்கொண்டு நன்றாக உமிழ்நீருடன் சேர்த்து மென்று விழுங்கவேண்டும்.

  • சாப்பிடும்போது புத்தகம் படிக்கவோ, டிவி பார்ப்பதோ, பேசுவதோக் கூடாது. சாப்பாட்டிலே முழு கவனமும் இருக்க வேண்டும்; ரசித்து ருசித்து சாப்பிடவேண்டும், முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவே சாப்பிடவும்.

  • தரையில் அமர்ந்து சாப்பிடவும்.

  • டீ, காஃபி குடிக்கக் கூடாது, சுக்குகாஃபிக் குடிக்கலாம்.

  • சீனி, புளி, பொடி உப்பு, மைதா (avoid white poisons) எடுக்கவேண்டாம்.

  • .

  • 2. குடிநீர்:

  •  

  • தாகம் எடுத்தால் மட்டும் நீர் பருகவும் அதுவும் உட்கார்ந்து மெதுவாகக் குடிக்கவும்; உமிழ்நீருடன் சேர்த்து (வாயை அடைத்துக்கொண்டு) குழைத்துக் குடிக்கவும். அதுவே ஜீரணத்திற்கு இலகுவாகும்.

  • நீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கக்கூடாது. உயிர் சத்துக்கள் அழிந்துவிடும். மினரல் வாட்டர், பாட்டில் தண்ணீர் குடிக்காதீர்கள். மண்பானையில் நீர் வைத்து 2மணிநேரம் கழிந்தபின்பு அதைக்குடிக்கவும்.

  • சிறுநீரை அடக்கிவைத்துக்கொண்டு நீர் பருகக்கூடாது; சிறுநீர் கழித்த பின்பு நீர் அருந்தலாம். அதுவே ஆரோக்கியம்.

  • நீரை நின்றுக் குடிக்கக்கூடாது (ஆண்மைக்குறைவு ஏற்படும்). அன்னாந்து மடமடவெனக் குடிக்கக்கூடாது; மெதுவாக சப்பிக்குடிக்க வேண்டும்.

  • பருத்திதுணியில் நீரை வடிகட்டி குடிக்கலாம். மற்றும் செம்புகாசு அல்லது செம்புத்தகடு நீரில் போட்டுவைத்து அரைமணிநேரம் கழிந்தபின்பு குடிக்கலாம். மொட்டைமாடியில் வெயிலில் வைத்தும் நீரைக் குடிக்கலாம்.

  • .

  • 3. காற்று:

  •  

  • .நமது வீட்டில் எப்போதும் காற்றோட்டம் நன்றாக இருக்கும்படி வைத்துக் கொள்ளவும். இரவு படுக்கும்போது ஜன்னல்களை பாதுகாப்பான முறையில் திறந்து வைத்து சுத்தமானக் காற்று உள்வந்து, அசுத்தக் காற்று வெளியில் போகிறமாதிரி அமைத்துக் கொள்ளவும்.

  • கொசுவலை பயன்படுத்தவும்; கொசுவர்த்தி, ஆல் அவுட் (அப்படியென்றால் நாமும் சேர்ந்து அவுட் என்று மறைமுகமாகக் கூறுவது) பயன்படுத்தாதீர்.

  • காலையில் நல்ல மூச்சு பயிற்சி செய்யுங்கள்.

  •  

  • 4.ஓய்வு (தூக்கம்):

  • .

  • உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6மணிநேரம் நன்றாக தூங்கவேண்டும்.

  • வடக்கே தலைவைத்து படுக்கக்கூடாது.

  • இரவு 11-3மணிவரை ஒருவர் கண்டிப்பாக தூங்கவேண்டும்; 11மணிக்குப் பிறகு விழித்திருப்பவர்களுக்கு கண்பிரச்சினை மற்றும் பித்தம் சம்பந்தமான நோய்கள், தசைப்பிடிப்புகள் வர வாய்ப்பிருக்கு.

  • இரவில் பல் விளக்கிவிட்டு படுக்கவும்.

  • மனதிற்கும், புத்திக்கும் வேலைகொடுப்பவர்கள் கண்டிப்பாக ஓய்வு எடுப்பது அவசியம்.

  • வாரத்தில் 2தினம் எண்ணை தேய்த்து குளிப்பது உடலுக்கு சிறந்தது.

  • .

  • 5. உழைப்பு:

  • .

  • உழைப்பிற்கேற்ற உணவு உட்கொள்ள வேண்டும்.

  • தினமும் நமது எல்லா மூட்டு இணைப்புகளும் அசைவு கொடுக்கிற விதத்தில் உழைக்கவேண்டும். (5 நேரமும் ஒழுங்காக தொழுதாலே போதும்).

  • AC-ஐ 37ºC-ல் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  • செருப்பின்றி காலை, மாலை நடக்கலாம். Reflexology points நன்றாக வேலை செய்யும்.

  • இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிணநீர் (lymphatic) ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும் (அம்மிக்கல், உரல், ஆட்டுகல் எங்கே?) உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிணநீரோட்டம் நன்றாக இருக்காது. இதுவே பல நோய்களுக்கும் காரணம்.

            மேற்கூறியபடி கடைபிடித்தால், நாம் உடல் ஆரோக்கியமாக வாழலாம் இறைவன் நாடினால்.. நமது உடலிலே அனைத்து நோய்களுக்கும் தீர்வு இருக்கு.

நாம் சம்பாதிக்கும் காசை மருத்துவத்திற்கு கொடுப்பதிற்கு பதில் மேற்கூறியக் கொள்கைகளைக் கடைபிடித்தால், சுகமான வாழ்வு நிச்சயம் இன்ஷா அல்லாஹ்!

         மேலதிக விபரத்திற்கு:

Dr.M.Sathick, HHA., ND., RNMP., DT., MD(Acu), Ph.D(Acu).

  • ATAMA's KK.Dist Organiser / Director of ATAMA Acupuncture Academy.

  • ஸஃபா அக்குபங்சர் சிகிட்சை மையம்.

  • ஃபிதௌஸியா அரபிக்கல்லூரி வளாகம்,

  • பறக்கை ரோடு, கோட்டார்.PO.

  • நாகர்கோவில் - 629002.

  • கன்னியாகுமரி மாவட்டம்.

  • கைபேசி: +91-9443389935; +91-8903333300

  • மின்னஞ்சல்: acusafa@gmail.com


 

Refer this page to your friends / relatives

                Health Articles                        Home Page                    Foods article