அறிவுக்கு சில துளிகள்

மு.சாதிக்.

  • செய்யத் தகுந்த செயலையும், வழிகளையும் எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணமுடியாது.

  • ஆணும் பெண்ணும் தனியாக இருக்கும்போது அவர்களுக்கிடையில் உறுதியான சுவர் இருக்கட்டும்.

  • உண்மையை அறிவது ஞானம்; உண்மையை நம்புவது பக்தி; உண்மையாக நடப்பது மார்க்கம்.

  • நாக்கு மூன்று அங்குல நீளம்தான், ஆனால் அது ஆறு அடி உயரமுள்ள மனிதனையும் கொன்றுவிடும் ஆற்றல் உள்ளது.

  • எந்த மனிதனுக்கும் வயது முக்கியமல்ல; ஆற்றல் சக்திதான் முக்கியம், அழுத்தமான நினைவுதான் முக்கியம்.

  • அன்புக்காக வாழ்பவரார் அன்புக்கு ஆவியையும் போக்க துணிபவரார் இன்ப உரைகள் தருபவரார் பெண்தான்.

  • ஒழுக்கமெனும் அஸ்திவாரத்தின் மீதுதான் இன்பமெனும் மாளிகை அமைக்க வேண்டும்.

  • அன்பு ஆட்சி செய்யுமிடத்தில் அச்சமில்லை. தூய அன்பு அச்சத்தை துரத்திவிடக் கூடிய சக்தி கொண்டது. பொய் சொல்லி பரிசு பெறுவதை விட உண்மை சொல்லி துன்பத்தை ஏற்பது மேல்.

  •                                 

                     .

இன்னும் தொடரும் இன்ஸா அல்லாஹ்..

Refer this page to your friends / relatives