|
|
From all Hadhees
collection, Quran |
Hadith Database
HADITH 500 |
Bukhari
Translation |
வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தையும்
தன் புறத்திலிருந்து உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; நிச்சயமாக
இதில் சிந்திக்கின்ற கூட்டத்தாருக்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
(குர்ஆன் 45:13) |
முஃமின்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து
கொள்வீர்களானால், உங்களுக்கு (நன்மை-தீமையைப்) பகுத்தறியும் தன்மையை அவன்
அளித்து, உங்களுடைய தீமைகளை உங்களை விட்டும் அகற்றி, இன்னும் உங்க(ளுடைய
பாவங்க)ளை மன்னிப்பான் (ஏனெனில்) அல்லாஹ் மகத்தான கருணை உடையவன். (குர்ஆன்
8:29) |
நிச்சயமாக மனிதன் அவசரக் காரனாகப்
படைக்கப்பட்டுள்ளான். ஒரு தீங்கு அவனைத் தொட்டுவிட்டால் பதறுகிறவனாகவும்
உள்ளான். (குர்ஆன் 70:19,20) |
நிச்சயமாக எவர்கள் அநியாயமாக அநாதைகளின்
பொருட்களைத் தின்கிறார்களோ அவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பையே தின்(று
நிரப்பு)கிறார்கள்; பின்னர் அவர்கள் கொளுந்து விட்டெரியும் நரக
நெருப்பில்தான் நுழைவார்கள். (குர்ஆன் 4:10)
|
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்
கொண்டும் (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அ(த்
தொழுகையான)து உள்ளச்சம் உள்ளவர்க்கேயன்றி (மற்றவருக்குப்) பெரும் பாரமாகவே
இருக்கும். (குர்ஆன் 2:45)
|
(முஃமின்களே!) ஓரளவு பயத்தாலும், பசியாலும்,
பொருட்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் (விளைச்சல்கள்) ஆகியவற்றின்
நஷ்டத்தாலும் திண்ணமாக நாம் உங்களைச் சோதிப்போம்; (நபியே! இச்சோதனைகளில்)
பொறுமையாளர்களுக்கு (சுவனத்தைக் கொண்டு) நீர் நன்மாராயங் கூறுவீராக! (குர்ஆன்
2:155) |
உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும்
நேரமெல்லாம் தொழுகையிலேயே அவர் இருக்கிறார். மேலும் அவர் தொழுகை முடிந்து
எழாதிருக்கும் வரை அல்லது அவரது உளு முறியாமலிருக்கும்வரை, வானவர்கள், "இறைவா!
இவரை மன்னித்து இவருக்குக் கருணை புரிவாயாக!" என்று பிரார்த்தனை
செய்கின்றார்கள். (புகாரி) |
அல்லாஹ் தான் நாடியவருக்கு உணவை (சம்பத்தை)
விரிவாக்குகிறான்; தான் நாடியவருக்கு (அதனைச்) சுருக்குகிறான்; உலக வாழ்வைக்
கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். உலக வாழ்க்கையோ மறுமைக்கு (ஒப்பிடும்
போது, அதன்) முன்னே, அற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (குர்ஆன் 13:26) |
உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னமே உங்களுடைய
ரப்பின்பால் நீங்கள் திரும்பிவிடுங்கள்; அவனுக்கு நீங்கள் முற்றிலும் பணிந்து
விடுங்கள்; (வேதனை வந்தால்) பிறகு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (குர்ஆன்
39:54) |
தொழுகையை விடுவது மனிதனைக் குஃப்ரில் சேர்த்து
விடுகிறது. தொழுகையை விடுவதே மனிதனையும் குஃப்ரையும் ஒன்று சேர்க்கிறது.
தொழுகை ஈமானையும் குஃப்ரையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. (தர்ஃகீப்) |
"மனிதருக்கும்
இணைவைப்பதற்கும் இடையில் தொழுகையைக் கைவிடுவதுதான் பிரித்தறிவிப்பது ஆகும்"
என்று, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினர். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ) |
ஒட்டு கேளாதீர்கள்; உளவு பாராதீர்கள்; தொழிற்
போட்டி போடாதீர்கள்; பொறாமைப் ப்டாதீர்கள்; பகை கொள்ளாதீர்கள்; நான்
நானென்று அகங்காரம் கொள்ளாதீர்கள்; இறைவனின் அடியார்களே! சகோதரர்கள்
ஆகிவிடுங்கள். (புகாரி) |
அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால்
அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு
உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிவதைப்பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில்
அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை. (புகாரி) |
"எவர் எதிர்காலத்தைப் பற்றி (ஜோஸியம்)
கூறுபவனிடம் சென்று, அவனிடம் எதையும் பற்றி வினவி, அவனின் கூற்றை உண்மையென
நம்புவாராயின் அவருடைய நாற்பது நாள் தொழுகை ஒப்புக் கொள்ளப்படமாட்டாது."
(முஸ்லிம்) |
எவர் உம்மை நம்பி ஒரு பொருளை அமானிதமாக
ஒப்படைத்தாரோ அதனை (அவரிடம் திரும்ப) ஒப்படைத்துவிடும். எவர் உம்மை மோசம்
செய்கிறாரோ அவருக்கு நீர் மோசம் செய்யாதீர். (அபூதாவூத், திர்மிதீ) |
பிறருக்கு மன வேதனை உண்டாகும் வகையில் ஒரு
நோன்பாளி நடந்துகொள்வானாயின், அவன் நோன்பு நோற்றும் பயனில்லை. (ஹதீஸ்) |
பொந்துகளில் சிறுநீர் பெய்வதை அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் தடை செய்தனர். (அபூதாவூத், நஸயீ) |
முஃமின் களில்
ஈமானால் பரிபூரணமானவர், அவர்களில் குணத்தால் மிக அழகானவரே! உங்களின்
மனைவியரிடம் சிறந்தவர்களே, உங்களில் சிறந்தவர்கள். (திர்மிதீ) |
நிச்சயமாக அவன் (அல்லாஹ்) சொல்லில்
பகிரங்கமானதையும் அறிவான்; நீங்கள் (மனதில்) மறைத்து வைத்திருப்பதையும்
அறிவான். (குர்ஆன் 21:110) |
ஒரு தந்தை தமது பிள்ளைகளுக்கு வழங்கும்
அன்பளிப்புக்களில் சிறந்தது, ஒழுக்கம் கற்பித்தலேயாகும். (திர்மிதீ)
|
"(உலக முடிவு நாள் பற்றிய) வாக்குறுதி
நெருங்கிவிட்டது. ஆனால் மனிதர்களோ அதனைப் பற்றி பாராமுகமாவே இருக்கிறார்கள்."
(குர்ஆன் 21:1)
|
Darulsafa Home |
Refer this page to your friends / relatives |