"இறைவன் மீதும் இறுதிநாள் மீதும்
பரிபூரணமாய் ஈமான் கொண்டு
தினம்
ஐவேளைத் தவறாமல் தொழுது
முறையாய்
ஜகாத்தை நிறைவாய் கொடுத்து
அல்லாஹ்வைத்தவிர
அடியாரெவர்க்கும்
அஞ்சாது
வாழும் மானிடரெவரோ அவர்தாம்
நேர்வழி
பெற்றவர், இறை இல்லங்களை
பரிபாலிக்கத்தகுதி
உடையோர்"
என்று
இறைவன் திருமறையில் (9:18)
கூறி
இருப்பதைப் பாருங்கள்.
நமதூர்
பள்ளிகளைப் பராமரிக்கும்
தலைவர்கட்கு
இறைவன் கூறும்
தகுதிகள்
யாவும் உள்ளனவா?
சிந்திப்பீர்
தோழர்களே!
இறைசிந்தனையை நீ அலட்சியம் செய்தால்
அந்த இறைவனை நீ அஞ்சிக்கொள்
நீ அறியாவிதத்தில் அருள் அனைத்தினையும்
அல்லாஹ் உனக்கு வழங்கிடுவான்.
கடல்வாழ் உயிரினம் பறவைகட்கும்
உணவளிப்பவன் இறைவன் இருக்க
உனக்கும் அவனே அருள்புரிவான் - நீ
வறுமையை நினைத்(துஏ)தேன் அஞ்சுகிறாய்.
உடல் பலத்தால்தான் உணவுகிடைக்கிறது
என்போர் கூற்று உண்மையெனில்
கருடனிருக்க குருவி என்றும்
எதையும் உண்ண முடியாதே
இவ்வுலகிலிருந்து நீ சென்றிடுவாய
என்பதனை நீ அறிவாயா?
இரவு உன்னைத்தழுவிடும் போது நீ
விடியல்வரை உயிர்வாழ்வாயா?
ஆரோக்கியமுடைய எத்தனையோ பேர்
நோய்நொடியின்றி இறந்ததுண்டு
உடல்நலம் குன்றிய பலபேர்கள்
நோயுடனேயே வாழ்வதுண்டு.
எத்தனையோ இளைஞ்ர்கள்
சிரித்தவண்ணமே வாழ்கின்றனர். ஆனால்
அவர்களது கபந்துணிகள் அவர்களுக்குத்
தெரியாமலேயே நெய்யப்படுகிறது.
ஓரிரு ஆயிரம் ஆண்டுகள் மனிதன்
உலகில் வாழ்ந்த போதினிலும்
என்றேனும் ஒருநாள் மரணமடைந்து
மண்ணறைச் சென்றே ஆகவேண்டும்.