இஸ்லாமிய இளைஞனே !

பல முறை தோற்றும் கரையைத் தொட முயன்றிடும் கடலைப் பார்!

நேரம் தவறாமல் விழித்திடும் சூரியனைப் பார்!

எதையும் எதிர்பார்க்காமல் தன் பயணத்தைத் தொடரும் காற்றைப் பார்!

மழை பொழிந்தாலும் மனம் தளராமல் பயணிக்கும் எறும்புகளைப் பார்!

பசித்த போதிலும் பகிர்ந்து உண்ணும் காக்கைகளைப் பார்!

இலைகள் உதிர்ந்த போதிலும் வருந்தாத இலவ மரங்களைப் பார்!

எவ்வளவோ இருக்கின்றனவே?

பறவைகள் பறக்க வேண்டும் என்பதற்காக ஆகாயம்

அசைய வேண்டியதில்லை.

இறக்கைகள் அசைத்தாலே போதுமே!...

 

தோட்டத்துக்குப் பெருமை பூ மலர்வதில் தான் இருக்கிறது!

மேகத்துக்குப் பெருமை மழை பொழிவதில்தான் இருக்கிறது!

சூரியனுக்குப் பெருமை வெயில் அடிப்பதில் தான் இருக்கிறது!

நிலவுக்குப் பெருமை இரவில் பிரகாசிப்பதில் தான் இருக்கிறது!

பூமிக்குப் பெருமை பயிர்கள் விளைச்சலில் தான் இருக்கிறது!

மூளைக்குப் பெருமை குர்ஆனை சிந்தனை செய்வதில் தான் இருக்கிறது!

 உனக்குப் பெருமை நான் முஸ்லிம் என்று

                            கூறி செயல்படுவதில் தான் இருக்கிறது!

 

கனவுகளும் நிறங்கள் தான் விழிக்கும் வரையில்!

தோல்விகளும் நிரந்தரம் தான் முயற்சிக்கும் வரையில்!

சோதனைகளும் தலைவலி தான் தன்னம்பிக்கை வளரும் வரையில்!

இளைஞனே!

நீ வென்றிடாமல் யார் தான் வென்றிடுவார். இப்பொழுது

வென்றிடாவிடின் பின் எப்பொழுது நீ வெல்வாய்?

 

மயிலுக்கு அதன் தோகை அழகு

மானுக்கு அதன் துள்ளல் அழகு

குயிலுக்கு அதன் குரல் அழகு

கிளிக்கு அதன் கொஞ்சும் பேச்சு அழகு

இளைஞனே..உனக்கு நன்னடத்தையே அழகு

 

உயர்ந்த இலட்சியத்துக்காக கனவு காண் - முயற்சி செய்

ஒரு நாள் வாழ்வில் வெற்றி பெறலாம்

முயற்சி செய்யாமல் விட்டு விடாதே! உன் வாழ்வே கனவாகி விடும்.

ஆயிரம் விளக்குகள் எரிய ஒரு தீக்குச்சி போதும்!

ஆயிரம் பூக்கள் மலர ஒரு விதை போதும்!

மணிக்கணக்கில் செய்யும் உபதேசத்தை விட

ஒரு கண நேரம் செய்யும் உதவியே உயர்வானது!

இறை வணக்கத்திற்காக ஒவ்வொரு தடவையும்

தலை பணியும் போது இறைவனிடமும், மனிதனிடமும் உன் மதிப்பு உயர்கிறது

பேஸ்வாஷ் செய்ய நீ "இமாமி" பயன்படுத்தினால்,

பூமியை டோட்டல் வாஷ் செய்ய இறைவன் 'சுனாமி'யை

பயன்படுத்திக் கொள்கிறான்.

சிகரத்தின் உச்சியை அடைந்து விட்டேன் என்று இறுமாப்பு கொள்ளாதே!

நீ ஏறியது வெறும் பனிச்சிகரமே! அது காலைக்கதிர் ஒளியாமல் கரைந்து விடும்!

 உன் வெற்றிக்கால் தடம் பதிக்கையில் ரேகை தேடாதே!

முயற்சியைத் தேடு!
 

நன்றி: அல் ஜன்னத் மாத இதழ் -ஜூலை2006

தொகுத்து வழங்கியது: குளச்சல் சாதிக்.

         Tamil Articles